Wednesday, December 26, 2007

அரன் ஆயிரம் - 6

அரன் ஆயிரம் - 6
******************
ஓம் காட்சிப் பொருளே போற்றி

ஓம் காடுறைவோய் போற்றி

ஓம் காண இயலாப் பேரொளியே போற்றி

ஓம் காந்தேசுவரா போற்றி

ஓம் காம்பன தோளியம்மை மணாளா போற்றி

ஓம் காமனை எரித்தவனே போற்றி

ஓம் காமம் களைவோய் போற்றி

ஓம் காமாட்சி மணாளா போற்றி

ஓம் காரண காரிய வித்தே போற்றி

ஓம் காரண காரியம் வகுத்தோய் போற்றி

ஓம் காரண காரியம் கடந்தோய் போற்றி

ஓம் காரண பஞ்சாக்கரமே போற்றி

ஓம் காரோணத்தாரே போற்றி

ஓம் காலடி பட்டவனே போற்றி

ஓம் காலமே போற்றி

ஓம் காலத்தின் தலைவா போற்றி

ஓம் காலத்தை வென்றாய் போற்றி

ஓம் காலத்தை வகுத்தாய் போற்றி

ஓம் காலனைக் காலால் உதைத்தவனே போற்றி

ஓம் காலகாலா போற்றி

ஓம் காலங்கள் மூன்றாய் ஆனவனே போற்றி

ஓம் காவதேசுவரா போற்றி

ஓம் காவியங் கண்ணியம்மை மணாளா போற்றி

ஓம் காவியமே போற்றி

ஓம் காவியச் சுவையே போற்றி

ஓம் காளத்திநாதா போற்றி

ஓம் காளையப்பா போற்றி

ஓம் காற்றே போற்றி

ஓம் காற்றில் இரண்டானாய் போற்றி

ஓம் கானக வேடா போற்றி

ஓம் கானார் குழலியம்மை மணாளா போற்றி

ஓம் கிரிகுசாம்பிகை மணாளா போற்றி

ஓம் கிழிதுகில் கோவணமுடையானே போற்றி

ஓம் கீழ்வேளூர் ஆளும் கோவே போற்றி

ஓம் குடந்தைக் கோவே போற்றி

ஓம் குண்டலி எழுப்புவோய் போற்றி

ஓம் குணமே போற்றி

ஓம் குணக்குன்றே போற்றி

ஓம் குந்தளநாயகி மணாளா போற்றி

ஓம் கும்பலிங்கா போற்றி

ஓம் குமரன் தந்தையே போற்றி

ஓம் குயிலினு நன்மொழியம்மை மணாளா போற்றி

ஓம் குரவா போற்றி

ஓம் குருவே போற்றி

ஓம் குரோதம் ஒழிப்போய் போற்றி

ஓம் குவளைத் திருவாயே போற்றி

ஓம் குவித்த கரத்துள் வளரும் கருத்தே போற்றி

ஓம் குழவியாம் எமைக் காப்போய் போற்றி

ஓம் குற்றமில் குணத்தோனே போற்றி

ஓம் குற்றம் பொறுத்த நாதா போற்றி

ஓம் குறிகுணம் கடந்தோய் போற்றி

ஓம் குறியற்ற இடமே போற்றி

ஓம் குறைவிலா நிறையே போற்றி

ஓம் குன்றலில் மோகினி மணாளா போற்றி

ஓம் கூத்தா போற்றி

ஓம் கூத்தின் தலைவா போற்றி

ஓம் கூற்றுக்குக் கூற்றானாய் போற்றி

ஓம் கேடிலியப்பா போற்றி

ஓம் கேதாரநாதா போற்றி

ஓம் கொடுமுடிநாதா போற்றி

ஓம் கொற்றவை மணாளா போற்றி

ஓம் கோகிலேசுவரா போற்றி

ஓம் கோடியே போற்றி

ஓம் கோடிநாதா போற்றி

ஓம் கோடிக்கா வாழ் குழகா போற்றி

ஓம் கோணப்பிரானே போற்றி

ஓம் கோதிலா அமுதே போற்றி

ஓம் கோதிலாத் தவமே போற்றி

ஓம் கோல்வளைநாயகி மணாளா போற்றி

ஓம் கோழம்பத்து வாழ் கூத்தா போற்றி

ஓம் கோளரவம் ஆட்டும் குழகா போற்றி

ஓம் கௌரி மணாளா போற்றி

ஓம் சக்கரமே போற்றி

ஓம் சங்கரா போற்றி

ஓம் சங்கத்தமிழ் காத்தோய் போற்றி

ஓம் சங்கக் குழைக் காதுடையோய் போற்றி

ஓம் சங்கொலியே போற்றி

ஓம் சசிகண்டா போற்றி

ஓம் சண்டிகை மணாளா போற்றி

ஓம் சண்பக வனநாதா போற்றி

ஓம் சட்டைநாதா போற்றி

ஓம் சடாமகுடா போற்றி

ஓம் சத்திய வடிவே போற்றி

ஓம் சத்திய வாகீசா போற்றி

ஓம் சத்தியம் காத்தருள்வோய் போற்றி

ஓம் சதாசிவா போற்றி

ஓம் சந்தியாய் நின்ற சதுரா போற்றி

ஓம் சம்புநாதா போற்றி

ஓம் சர்வாங்க நாயகி மணாளா போற்றி

ஓம் சற்குணநாதா போற்றி

0 Comments: