அரன் ஆயிரம் - 5
******************
ஓம் ஐந்தெழுத்தே போற்றி
ஓம் ஐந்தும் வென்றாய் போற்றி
ஓம் ஐயா போற்றி
ஓம் ஐயனாரே போற்றி
ஓம் ஐயாரப்பனே போற்றி
ஓம் ஐராவதீசுவரா போற்றி
ஓம் ஒத்த சங்காரா போற்றி
ஓம் ஒப்பிலா மணியே போற்றி
ஓம் ஒப்பிலாவம்மை மணாளா போற்றி
ஓம் ஒப்புயர்வற்ற ஒளியே போற்றி
ஓம் ஒருகாலத் தொன்றாக நின்ற சிவனடி போற்றி
ஓம் ஒளிவளர் விளக்கே போற்றி
ஓம் ஒளிக்கு முதலே போற்றி
ஓம் ஒளிப்பிழம்பாய் உள்ளே திழும் மலரடி போற்றி
ஓம் ஒளியில் ஐந்தானவா போற்றி
ஓம் ஒளியின் சுடரே போற்றி
ஓம் ஒன்றுமிலா பெருவெளியே போற்றி
ஓம் ஒழிவற நின்றவனே போற்றி
ஓம் ஒன்றானாய் போற்றி
ஓம் ஒன்றா நெஞ்சில் உறையாய் போற்றி
ஓம் ஒன்றிலிருந்து இரண்டானாய் போற்றி
ஓம் ஓங்காரத்து ஒருவனே போற்றி
ஓம் ஓங்கார நாதமேபோற்றி
ஓம் ஓங்கொளி வண்ணா போற்றி
ஓம் ஓசைகொடுத்த நாயகி மணாளா போற்றி
ஓம் ஓசையில் ஏழானவனே போற்றி
ஓம் ஓணேசுவரா போற்றி
ஓம் ஓதரிய பொருளே போற்றி
ஓம் ஓதாவேதம் உணர்வித்தாய் போற்றி
ஓம் ஓருருவின் மூவுருவாய் ஒன்றாய் நின்றவா போற்றி
ஓம் ஓரெழுத்து மந்திரமே போற்றி
ஓம் ஒலிக்கும் நாதமே போற்றி
ஓம் ஓவாப்பிணி ஒழிப்பாய் போற்றி
ஓம் கங்காளா போற்றி
ஓம் கங்கை நாயகா போற்றி
ஓம் கச்சி ஏகம்பா போற்றி
ஓம் கஞ்சனூராண்ட கோவே போற்றி
ஓம் கடந்தை நாயகி மணாளா போற்றி
ஓம் கடம்பவனநாதா போற்றி
ஓம் கடலின் நஞ்சமுதுண்டாய் போற்றி
ஓம் கட்டங்கம் ஏந்தியோனே போற்றி
ஓம் கணக்கு வழக்கைக் கடந்தாய் போற்றி
ஓம் கணபதீசுவரா போற்றி
ஓம் கண்ணன் பணிந்த கழலே போற்றி
ஓம் கண்ணிற் பாவையே போற்றி
ஓம் கண்ணார் அமுதா போற்றி
ஓம் கதிரின் ஒளியே போற்றி
ஓம் கதியே விதியே போற்றி
ஓம் கதி விதி அமைத்தோய் போற்றி
ஓம் கதிர் மண்டல நடுவே போற்றி
ஓம் கதிரவனும் தொழும் ஒளிப்பிழம்பே போற்றி
ஓம் கபாலக் கலனுடையோய் போற்றி
ஓம் கபாலீ போற்றி
ஓம் கமலன் பணிந்த கழலே போற்றி
ஓம் கமலாம்பிகை மணாளா போற்றி
ஓம் கயிலை மலையானே போற்றி
ஓம் கரக்கோவிலா போற்றி
ஓம் கரியுரி உடுத்தவனே போற்றி
ஓம் கருதரிய மாயை களைவோய் போற்றி
ஓம் கருந்தார்க் குழலி மணாளா போற்றி
ஓம் கருநாகக் கண்டா போற்றி
ஓம் கரும்பன்ன சொல்லியம்மை மணாளா போற்றி
ஓம் கருவே போற்றி
ஓம் கருவில் உயிரே போற்றி
ஓம் கருணைக் கடலே போற்றி
ஓம் கருணை மலையே போற்றி
ஓம் கரும்பனையாளம்மை மணாளா போற்றி
ஓம் கரும வினை தீர்ப்பாய் போற்றி
ஓம் கருமையின் வெளியே போற்றி
ஓம் கருமணியே போற்றி
ஓம் கருதுவார் கருதும் உருவே போற்றி
ஓம் கருத்தே போற்றி
ஓம் கருத்தின் அருத்தமே போற்றி
ஓம் கருத்தில் நினைவே போற்றி
ஓம் கருத்தாழ் குழலியம்மை மணாளா போற்றி
ஓம் கருத்தறிந்து அருள்வோய் போற்றி
ஓம் கருவழிப் பிறப்பு அறுப்போய் போற்றி
ஓம் கல் தூணே போற்றி
ஓம் கல்நார் உரித்த கனியே போற்றி
ஓம் கல்லாய் ஆனவனே போற்றி
ஓம் கல்யானைக்குக் கரும்பு ஊட்டியவனே போற்றி
ஓம் கல்யாண சுந்தரா போற்றி
ஓம் கல்யாணசுந்தரி மணாளா போற்றி
ஓம் கலகம் தவிர்ப்போய் போற்றி
ஓம் கலையே போற்றி
ஓம் கலையின் ஒளியே போற்றி
ஓம் கவலை, பிணி தீர்ப்பவனே போற்றி
ஓம் கழலும் சிலம்பும் ஆர்க்கும் தாளடி போற்றி
ஓம் கழல் பணிந்தோரைக் காப்போய் போற்றி
ஓம் கற்பக நாயகி மணாளா போற்றி
ஓம் கற்பனை கடந்த சோதி போற்றி
ஓம் கற்றோர் ஏத்தும் கழலே போற்றி
ஓம் கற்றோர் உள்ளத்து உறைவோய் போற்றி
ஓம் கனலே போற்றி
ஓம் கனவிலும் தேவர்க்கு அரியவனே போற்றி
ஓம் கனியே போற்றி
ஓம் கனியினில் இனிமையே போற்றி
ஓம் கனிந்த முக அழகே போற்றி
ஓம் கனிவாய்மொழி அம்மை மணாளா போற்றி
Wednesday, December 26, 2007
அரன் ஆயிரம் - 5
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment