Sunday, December 30, 2007

திருவாசகம் - 8.புறத்தார்க்குச் சேயோன்றன்

திருவாசகம்
*************

8.புறத்தார்க்குச் சேயோன்றன் பூங்கழல்கள் வெல்க

புறத்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க

சேயோன் = தொலவிலுள்ளவன்
புறத்தார்க்கு = வணங்காது இறைத் தன்மைக்கு புறம்பாய் இருப்போர்க்கு

இறைவனை வணங்காது இறைத் தன்மைக்கு புறம்பாய் இருப்போர் இறைவனிடமிருந்து வெகு தொலைவில் உள்ளனர். தொழுபவர்க்கோ அவர்தம் உள்ளத்தின் (அருகில் அல்ல) உள்ளே வசிக்கிறான். அப்படிப்பட்ட தன்மை உடைய திருவடிக் கழல்கள் வெற்றி உடையதாகுக.

10 Comments:

Anonymous said...

ஞானவெட்டியான். திருவாசகத்திலுள்ள எல்லா வரிகளும் சிறந்தவையே எனினும் இது மிகமிகச் சிறந்தது.

இறைவன் அனைவருக்கும் பொதுவானவன். அனைவருக்கும் ஒரே தொலைவில் ஒரே அளவில் ஒரே நிறையில் எப்பொழுதும் இருக்கின்றான். இறைவன் இருக்கின்றான் என்று நம்புகின்றவர்களுக்கு இறைவனின் அருகாமை உணரக் கிடைக்கின்றது. இல்லை என்பவனுக்கு அருகிலிருந்தும் உணராமையே கிடைக்கின்றது. இந்தப் பொய்த் தொலைவைத்தான் மாணிக்கவாசகர் இங்கு குறிப்பிடுகின்றார்.

இந்த வரியைப் பார்த்தால், இறைவன் தன்னை வணங்காதவர்க்குத் தொலைவில் நிற்பான் என்று சொல்லவில்லை. மாறாக இறைவன் நம்பாதவர்களுக்குத் தொலைவில் இருப்பதைப் போன்றவன் (சேயோன்றன்) என்று கூறியிருக்கின்றார். என்னுடைய விளக்கம் சரிதானா?

Anonymous said...

அன்பு இராகவன்,
நானும் அதைத்தான் சொல்ல முயன்றுள்ளேன்.
பொருள் கிட்டுவதும் தொனி வேறாய்த் தெரிகிறதோ?
தங்களின் விரிவான விளக்கத்துக்கு நன்றி.

இனி வரும் விளக்கங்களை விளக்கமாகவே எழுத முயலுகிறேன்.

இத்துடன் நின்றுவிடப் போவதில்லை. பொழுது கிட்டும்பொழுது இன்னும் விரிவாக்கம் செய்து (நூலாதரங்களுடன்)வெளியிடுகிறேன்.

Anonymous said...

ஆம் ஐயா. இன்னும் அதிக விளக்கங்களுடன் நூலாதாரங்களும் சேர்த்து எழுதுங்கள் ஐயா.

நம்மாழ்வாரும் இதைத் தான் சொல்கிறார்.

'பத்துடை அடியவர்க்கெளியவன் மற்றவர்களுக்கரிய நம் வித்தகன் நம் அரும் பெறல் அடிகள்'

Anonymous said...

Gnanavettiyaan and Raghavan,

Why does Almighty give such testing times to us even when we pray to Him sincerely? Everything in this universe happens because of Him. If that is the case, then how can one attribute our suffering to our sins. Is it not contradictory?

Anonymous said...

அன்பு nr,

'வினையும் அதன் மறுவினையும் சமமாகவும் எதிரானதாகவும் இருக்கும்' என்று கூறியது நியூட்டனின் சித்தாந்தம். இதை இயற்பியல் உலகில் அப்படியே நாம் ஏற்றுக்கொள்கிறோம். இதன் ஆன்மிகப் பயன்பாடுதான் 'கர்மா தியரி' என்று
சொல்லப்படும் வினைப்பயன் கொள்கை.

'வினை விதைத்தவன் வினை அறுப்பான்', 'முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்', 'தீயவை தீய பயத்தலால் தீயவை தீயினும் அஞ்சப்படும்' என்றும் முன்னோர்கள் வேண்டிய அளவு நம்மை எச்சரித்தனர். ஆனால் நாம் 'மூத்தோர் சொல்
வார்த்தை விடம்' என்று பெரும்பாலும் நினைக்கிற காலத்தில் இருக்கிறோம்.

தவறு செய்தவன் நம் கண் முன்னாலேயே தண்டனை பெறவேண்டும், இல்லையென்றால்
தெய்வம் என்ற ஒன்றே கிடையாது எனப் பேசுகிறோம்.

தமிழில் 'தெய்வம்' என்ற சொல்லுக்கு 'விதி' என்ற பொருளும் உண்டு. 'விதி'யை யார் விதித்தார்கள், யாருமல்ல. நாமேதான். அதனால்தான் சங்கப் புலவன் 'தீதும் நன்றும் பிறர்தர வாரா' என்று மிக உறுதியாகக் கூறினான். இந்துமதம் கடவுளை சாட்சி பூதம் என்று ஒருநிலையில் சொல்கிறது.

நீங்கள் வானத்தை நோக்கி எச்சில் துப்பினீர்கள், அது உங்கள் மேல் மீண்டு வந்து விழுந்தது.
உடனே வானம் என்மீது எச்சில் துப்பியது என்று அலறி என்ன பயன்? வானம் பார்த்துக் கொண்டுதான் இருந்தது. வானம் மிக மேலே இருக்கிறது. உங்களைப் பழிவாங்க அதற்கு நேரம் இல்லை. நீங்கள் துப்பியதை இயற்கை மீண்டும் உங்கள் மேலேயே விழுமாறு செய்தது. அது போலத்தான் கடவுளும்.

எச்சில் துப்பினால் எச்சில் விழும், வானத்தை நோக்கி அமிலத்தை ஊற்றினால்... ஊற்றியவன் அமில மழையில் நனைவான், உருக்குலைந்து போவான்.

அப்போது, 'ஐயோ, இறைவா! உனக்கு என்மீது கருணை இல்லையா?' என்று கதறுகிறான்.
அவநம்பிக்கைப் படுகிறான். மற்றவர்கள் எல்லாம் நன்றாக இருக்க எனக்கு மட்டும் ஏன் இப்படித் துன்பம் வருகிறது என்று புலம்புகிறான். பல
சினிமாக்களில் வருவது போல் சாமி படத்தைக் கழட்டி எறிகிறான். சில சமயம் கடவுள் நம்பிக்கையையே இழக்கிறான்.

இவன் செய்த வினை என்ன? பாவம் என்ன? இவைகளை மறக்கிறான். இறைவனைக் குறை கூறுகிறான். இது என்ன நியாயம்?

"உப்பு தின்றவன் தண்ணீர் குடிக்கத்தான் வேண்டும்"

Anonymous said...

நன்றாக உள்ளது
வாசகம் என்றால் சொல்
திருசேர்த்தால் நல்ல சொல் அப்படித்தானே

Anonymous said...

சேய்மை என்று இதற்குப் பொருள் கொள்ள வேண்டுமா?!!! சேய் என்றால் குழந்தை என்று நினைத்து பொருள் புரியாது விழித்துக் கொண்டிருந்தேன்.. திருவாசகத்தைத் தொடர்ந்து எழுதுங்கள் ஐயா.

Anonymous said...

அன்பு பொன்ஸ்,
முயலுகிறேன்.

Anonymous said...

ஞானவெட்டியான் அவர்களுக்கு
எப்பொழுதெல்லாம் மனம் சஞ்சலம் அடைகிறதோ அப்பொழுது நீங்கள் குமரன் ராகவன் மற்றும் பல நண்பர்கள் எழுதும் ஆன்மிக எழுத்துக்களை படித்து மன அமைதி பெறுவேன். உடனுக்குடன் படிக்காவிட்டாலும் தேவையான போது தெள்ளமுதமாய் கிடைக்கும். அதனால் தொடர்ந்து எழுதுங்கள். உங்களுக்கு தெரிந்த நீங்கள் உணர்ந்த எல்லா ஆன்மீக அனுபவங்களையும் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி.

Anonymous said...

அன்பு supersubra,
பலபணிகளை முடிக்கவேண்டியிருந்ததால்தான் சுணக்கம். இனி என் இடுகைகள் தொடரும்.
நன்றி.