Monday, December 31, 2007

87.கொண்டு விண்படர்கருடன்

விவேக சிந்தாமணி
********************
87.கொண்டு விண்படர்கருடன் வாய்க்கொடு வரிநாகம்
விண்டநாகத்தின் வாயினில் வெகுண்டவன்றேரை

மண்டுதேரையின் வாயினிலகப் படுவண்டு

வண்டுதேனுக ரின்பமே மானிட வின்பம்.


அடுத்தடுத்து வரும் துன்பங்கள் என்னென்ன, இறுதியி மரணம் வரும் என்பதையெல்லாம் தெரிந்திருந்தும், அற்ப இன்பங்களைத் தேடி ஓடி மிகுந்த பாடுபட்டு அவைகளை அநுபவிக்கும் மானிடரே! இவ்வின்பங்கள் நிலையற்றது.

தேனையுண்ணும் வண்டானது தவளை வாயில் சிக்கியது; அந்தத் தவளையோ, கவ்விய வண்டுடனே வரிகளுடன் கூடிய உடலை உடைய நாகத்திடம் சிக்கியது; நாகம் கவ்விய தவளையுடன் செல்லும்போது ஒரு கருடன் வந்து நாகத்தைக் கவ்விப் பறந்தது. இந்த சூழ்நிலையில், நிலையற்ற மானிட இன்பம், தேனைச் சுவைத்துக் கொண்டுள்ள வண்டின் நிலையை ஒத்ததாம்.

2 Comments:

Anonymous said...

நிலையாமை நன்றாக சொல்லப்பட்டிருக்கிறது....நன்றி

Anonymous said...

அன்பு மதுரைஅம்பதி,
மனிதன் நாடும் அற்ப இன்பங்களின் தன்மையும் விளக்கப்பட்டுள்ளது, அல்லவா?