ஞானம் எட்டி
**************
83.ஆதார மானபர நாத விந்து
வாதிசதா சிவன்கூறா மாண்டே கேளீர்
பாதார முடியளவுங் கணக்க தாகப்
பாலித்து விபரபமதாய்ப் பகர யானும்
வேதாக மத்தில்நின்று நடனஞ் செய்யும்
விந்துநாதத் தின்செயல் விபர மாக
நாதாக்கள் கமலபதந் துதித்து யானு
நவிலவுமே யான்கண்ட நடத்தையாண்டே.
இவ்வுடல் உண்டாவதற்கு முதற்காரணமான நாதமும், விந்துவும், சதாசிவன் கூறாகும். இவைகளையெல்லாம் வேதாகமங்களில் மூழ்கித் திளைத்திருக்கும் ஆன்றோர்களின் திருவடிகளை வணங்கி, பாதமுதல் சிரசளவும் உள்ள பகுதிகளின் பிரிவுகள், தொகுப்புகள் ஆகிய விவரங்களை எல்லாம் நான் சொல்லுகின்றேன் என் ஆண்டைமாரே! அவைகளை நீங்கள் கேளுங்கள்.
Saturday, December 29, 2007
83.ஆதார மானபர நாத விந்து
Posted by ஞானவெட்டியான் at 6:10 PM
Labels: ஞானம் எட்டி
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment