Saturday, December 29, 2007

82.வீறான கையெலும்பு பிருதிவியின்

ஞானம் எட்டி
****************
82.வீறான கையெலும்பு பிருதிவியின் கூறாம்
விதமான வுண்ணீரு பிரமன் கூறாம்
பேறான தசநாடி வாய்வு பத்தும்
பிலமான நரம்பெல்லா மாலின் கூறாம்
கூறான வுதிரமெல்லாஞ் சத்தி கூறாம்

கூடிநின்ற வெலும்பெல்லாம் ருத்திரன் கூறாம்

சீரான நிணத்தோடு மச்சை சவ்வுஞ்
சிறந்தருளு மயேசுபரத்தின் கூறா மாண்டே.

என் ஆண்டே! மிகுந்த வலிமையுடைய கையிலுள்ள எலும்புகளும் நுறுக்கெலும்புகளும் மண் சம்பந்தமான பிரமனுடைய பங்காகும். பத்துவித நாடி, பத்துவித வாயு, வலிமையான நரம்பு, ஆகியவையெல்லாம் திருமாலின் கூறாகும். இரத்தம் சக்தியின் பங்காம். மற்ற எலும்புகளெல்லாம் ருத்திரன் கூறாகும், நிணம், மச்சை, சவ்வு முதலியவைகள் அருளிற் சிறந்த மகேசுவரன் கூறாகும்.

உடலிலுள்ள எழுபத்து ஈராயிரம் நாடிகளுக்குள் உள்ள பூரணமான பத்து நாடிகளுக்குள் முதலானதும் ஆதியானதுமான உயிர் நாடியே தலையானது.

பூரணமான பத்து நாடிகள் :

இடைகலை, பிங்கலை, சுழுமுனை, சிகுவை, புருடன், காந்தாரி, அத்தி, அலம்புடை, சங்கினி, குரு. இவற்ரை முறையே, இடப்பால் நரம்பு, வலப்பால் நரம்பு, நடு நரம்பு, உள்நாக்கு நரம்பு, வலக்கண் நரம்பு, இடக்கண் நரம்பு, வலச்செவி நரம்பு, இடச்செவி நரம்பு, கருவாய் நரம்பு, எருவாய் நரம்பு என்பர்.

வளி (காற்று) பத்து :

உயிர்வளி, மலக் காற்று, தொழிற் காற்று, ஒலிக் காற்று, நிரவு காற்று, தும்மற் காற்று, விழிக் காற்று, கொட்டாவி (கெட்ட ஆவி), இமைக் காற்று, வீங்கற் காற்று. இவைகளை முறையே, பிராணன், அபானன், வியானன், உதானன், சமானன், நாகன், கூர்மன், கிருகரன், தேவதத்தன், தனஞ்செயன் எனக் கூறுவரும் உண்டு.

இவற்றை திருமூலர்,

"நாடிகள் பத்தும் நலந்திகழ் வாயுவும்" என்று அவத்தை பேதத்தில் கூறியுள்ளார்.
நாடிகள் உடலின் உந்திச் சுழியிலிருந்து கீழிருந்து மேல்புறமாய் பேய்ச் சுரைக்காயின் கூடுபோல் உடலைப் பின்னி நிற்பன. இவை மொத்தம்72,000 என நூல்கள் கூறுகின்றன. இவற்றின் சிலவற்றிற்கு முழு விவரம் மருத்துவ நூல்களில்தான் கிட்டுகின்றன.


தலயில் ............................ 7,000
வலது காதில் ................ 1,500
இடது காதில் ................. 1,500
வலது கண்ணில் ......... 2,000
இடது கண்ணில் .......... 2,000
மூக்கில் ............................ 3,330
பிடரியில் ......................... 1,000
கண்டத்தில் ..................... 1,000
வலது கையில் ............. 1,500
இடது கையில் .............. 1,500
தொண்டைக்கும்
நாபிக்கும் மத்தியில்..... 8,990
பிடரியின் கீழ் ................ 8,000
விலாவில் ....................... 3,000
கால்களின் சந்தில் ..... 8,000
பீசத்தின் மேல் ............. 2,000
பீசத்தின் கீழ் .................. 2,000
பாதத்தில் ......................... 1,000
பிடரிக்குப் பின்னால்... 3,680
கோசம் ............................ 13,000
************************************
ஆக நரம்புகள் ............ 72,000
************************************

பெருவாரியான ஞான நூல்கள் பத்து நாடிகளுக்குத்தான் முக்கியத்துவம்

தருகின்றன. இதிலும் இடகலை, பிங்கலை, சுழிமுனை ஆகிவைகளே மிக அதிகமாக விவாதிக்கப்படுகின்றன.

இடகலை - வாத நாடி

பிங்கலை - பித்த நாடி

சுழிமுனை - சிலேத்தும நாடி

இம்மூன்றையும் வைத்துத்தான் நம் முன்னோர், அதிலும் வைத்தியர்கள் உடலின் நோய்களைக் கண்டறிந்தனர்.

இ(டை)ட கலை - இடது நாசியினுள்ளே செல்லும் கற்று. இதுவே சந்திர நாடி.

சக்தி நாடிஎன்போருமுண்டு.

பிங்கலை - வலது நாசியினுள்ளே செல்லும் மூச்சு. இதைச் சூரியநாடி, சிவநாடிஎன்பர்.

சுழிமுனை - அக்கினி நாடி. இடத்திற்கு இடம் மறுபடும்.

அதாவது அண்டம், பிண்டம், சூக்குமம், அதி சூக்குமம்.

அறிவாலுணர்வது அண்டம்.

உணர்வாலுணர்வது பிண்டம்.

நினைவால் உணர்வது சூக்குமம்.

கருத்தில் நிற்பது அதிசூக்குமம்.

சிகுவை - உள்நாக்கு நரம்பு

புருடன் - வலக்கண் நரம்பு

காந்தாரி - இடக்கண் நரம்பு

அத்தி - வலது காது நரம்பு

அலம்புடை - இடக் காது நரம்பு

சங்கினி - ஆண்(பெண்) குறி நரம்பு

குகு - குத நரம்பு

ரக்தவியானன் - இனப்பெருக்கத்திற்குறிய சுக்கிலம், முட்டை ஆகியவைகளை

வெளித் தள்ளும் நரம்பு.

0 Comments: