Saturday, December 29, 2007

81.நட்டுவைத்த வெலும்புகால்

ஞானம் எட்டி
***************
81.நட்டுவைத்த வெலும்புகால் துண்டு நாலு
நலமான கையெலும்பு துண்டு நாலு
ஒட்டிவைத்த பழுவெலும்பு முப்பத் திரண்டு
வுன்னதமாந் தண்டுபதி னாறு கண்டம்
மட்டுவைத்த வெலும்புமுச்சா ணதற்கு மேலே
வளமான நுறுக்கெலும்பு மாயி ரந்தான்
சுட்டலைந்த பாண்டமீ தெடுத்த நேர்மை
தொகையெல்லாஞ் சபைதனிலே சொல்வே னாண்டே.

கால் எலும்புத்துண்டு 4, கையெலும்புத்துண்டு 4, பழுவெலும்புத்துண்டு 32,
முதுகந் தண்டு எலும்புத்துண்டு 16, அக்கண்டத்தின் மூன்று சாண் மேலே பொடியெலும்பு 1000, ஆகிய எலும்புத் துண்டுகளை ஒன்று சேர்த்து, நிணம், சதை, இரத்தம் ஆகியவையுடன் கூட்டி எடுத்த இந்த மட்பாண்டமாம் உடலின் கூறுகள்(நேர்மை) இப்படிப்பட்டவை என்று நான் இச்சபையில் சொல்லுவேன், ஆண்டே!

0 Comments: