Saturday, December 29, 2007

80.சத்தமது பிருதிவி மேலே

ஞானம் எட்டி
*************
80.சத்தமது பிருதிவி மேலே நிற்குந்
தாங்கிநின்ற பரிசமது வப்பு மேலாம்
பத்திதரும் ரூபமது சிகார மேலாம்

பாங்கான ரசமதுவும் வகார மேலாம்

சித்தமகிழ்ந் ததுவுமொரு யகாரமேலாஞ்
சீர்பெறவே காயமெனத் திரண்டே யாச்சு
வெற்றிதருங் கருவியொரு தொண்ணூற் றாறு
விரைந்துறைந்தே யுதிரமதில் பிறந்த தாண்டே.

பிரமன்..........நிலம்(பிருதிவி).....சத்தம்
விட்டுணு.........நீர் ..............தொடு உணர்வாம் பரிசம்
உருத்திரன்.......நெருப்பு .........உருவம்
மகேசன்.........வாயு .............ரசமாகிய உருசி
சிவன்(சீவன்)....ஆகாயம்.........வாசனை

ஐம்பூதங்களில், ஓங்கார சத்தமானது நிலத்தின் மேலும், அதைத் தாங்கி நிற்கும் பரிசமானது நீரின் மேலும், பக்தி தரும் உருவமானது சிகாரமாகிய நெருப்பின் மேலும், ரசமாகிய உருசி வகாரமென்னும் வாயுவின் மேலும், வாசனை யகாரமென்னும் ஆகாயத்திலும் கலந்து தொண்ணூற்றாறு கருவிகளோடு சேர்ந்து இந்த உடல் தாயின் கருப்பப் பையிலிருந்து வெளிவந்தது.

இங்ஙனமின்றி சத்தம் ஆகாயகுணமாகவும், பரிசம் வாயு குணமாகவும், உருவம் தேயுகுணமாகவும், ரசம் அப்பு குணமாகவும் வாசனை பிருதிவி குணமாகவும் இயற்கையாகக் கொள்வோமானால் இவ்வுடல் கருப்பையிலிருந்து வெளிவருதல் இல்லை என்பர். அவற்றையெல்லாம் இங்கு மாற்றிக் கூறினார்.

0 Comments: