Friday, December 28, 2007

7.பூதாதி யிருந்துவிளை

ஞானம் எட்டி
***************

7."பூதாதி யிருந்துவிளை யாடு பீடம்
...........பொற்கமல மாயிரத்தெட் டிதழின் பீடம்
நாதாக்கள் திருநடன மெளன பீடம்
...........நந்தியொளி விந்துசெக நாத பீடம்
வேதாந்த பூரணமெய்ஞ் ஞான பீடம்
...........வித்தார வாகமத்துக் கதீத மான
ஆதார மூலவன்னி யமர்ந்த பீட
...........மாநந்த நடனசபை யைந்துங் காப்பாம்."

ஐம்பூதங்களிருந்து விளையாடுதற்குரிய பீடமும், ஆயிரத்தெட்டிதழ் தாமரை மலரானது இருக்கத்தக்க இடமும், பெரிய நாதாக்களெல்லாம் அசைவற்றிருந்து மெளனம்செலுத்தின பீடமும், நந்தியொளியை வீசுகின்ற விந்துபீடமாகிய செகன்னாத பீடமும், வேதாந்த நூற்களில் கூறப்பட்ட பூரண ஞானபீடமும், மிகவும் விரிந்திருந்த ஆகம நூல்களுக்கு அப்பாற்பட்டு ஆதாரத்தில் உள்ள மூலக்கனலின் பீடமும், பஞ்சகிருத்தியத் தாண்டவஞ் செய்யும் ஐந்து சபைகளும் ஆகிய யாவும் சேர்ந்து இந்நூலைக் காக்க.

0 Comments: