Friday, December 28, 2007

6.ஆக்கினைக்குள் சத்தம்

ஞானம் எட்டி
***************

6."ஆக்கினைக்குள் சத்தம்பிரு திவீபீட
.......... மப்புவின் வீடுவன்னி வாயுவின் வீடு
ஏக்கமில்லா வாகாச மேரு வீடு
.......... இரவிமதி சுடரிலகு மின்ப வீடு
பார்க்கபணா முடிநடுவில் நடனஞ் செய்யும்
......... பராசத்தி சிவசிங்கா தனத்தின் வீடு
பூக்குமலர் வாசியிருந் துலவும் வீடு
........ புகழ்பெரிய வைம்பூதம் புலன்காப் பாமே.



ஆக்கினைக்குள் இருக்கும் சத்தமும், ஐம்பூதங்களின் வீடும், சூரிய சந்திரர்களின் வீடும், ஆதிசேடனுக்கு நடுவாயிருக்கும் தலையினின்றும் நடனஞ்செய்கின்ற பராசத்தியானவள் சிங்காதனத்தில் கொலுவமர்கின்ற வீடும், சரமானது மாறிமாறி உலவுதற்குறிய வீடும், ஐம்பூதங்களும், அவற்றிற்குள் வீடாய்விளங்கும் ஐம்புலன்களும், இந்நூலை யாதொரு இடையூறுமின்றி முடித்தருள காப்பாம்.

0 Comments: