Friday, December 28, 2007

5. பாதமடி மூலநடு

ஞானம் எட்டி
**************

5. பாதமடி மூலநடு விந்தின் மூலம்
............ பராபரையின் வீடுபரப்பிரம வீடு
ஓதுசந்திர புஷ்கரணி மாலின் வீடு
............... ஓரெழுத்தாய் நின்றிலங்கும் ருத்திரன் வீடு
நாதவிந்தின் மேருமுடிச் சுடரின் வீடு
............ நாதாந்த மயேஸ்பரத்தின் வாயுவின் வீடு
சூதமுனி யீசனுற வாடும் வீடு
.......... சோதியெனு மாக்கினையின் காப்புத் தானே.


பாதத்தின் அடிமூலம், நடுமூலம், விந்துமூலமும் பராசத்தியின் வீடும், பரப்பிருமத்தின் வீடும், சந்திரபுட்கரணியையுடைய திருமாலின் வீடும், ஓரெழுத்தின் மயமாக விளங்கும் உருத்திரன் வீடும், நாதவிந்துக்களின் மேருமுடியாகிய சுடரின் வீடும், நாத தத்துவத்திற்கு அதீதப்பட்ட வாயு பூதவிடமான மயேசுவரத்தின் வீடும், சூதமுனியும் ஈசுவரனும் உறவாயிருந்து விளையாடும் வீடும், சோதிமயமான ஆக்கினை வீடும், காக்க.

அடிமூலமென்பது மூலாதாரம்.

நடுமூலமென்பது அநாகதம்.

சந்திரபுட்கரணி என்பது இடதுபாதமாகிய சந்திரன். இதுவே பிறையெனக் கொள்வதுமுண்டு.(முகுளம்)

சூதமுனியும் ஈசுவரனும் உறவாயிருந்து விளையாடும் வீடு என்பது சுழிமுனை வீட்டை.

இதை மவுனவீடென்றும் கொள்வர்.

0 Comments: