Friday, December 28, 2007

4. சடாதா மதிலிலகுந்

ஞானம் எட்டி
**************

4. சடாதா மதிலிலகுந் தவள வாணி
................சரஸ்வதியும் பிரமன்பத மாலின் பாதம்
நீடாழி லட்சுமிப்பெண் ணருளின் பாதம்
..............நிரஞ்சனருத் திரன்பாத னேமி பாதங்
கடாகமெல்லாம் நிறைந்துநின்ற மயேசன் பாதங்
............கருணைமயேஸ் வரியினிரு கமல பாதந்
தடாதசதா சிவத்தின்மனோன் மணியின் பாதஞ்
..........சாம்பசிவன் பொற்பாதஞ் சந்ததமுங் காப்பாம்.


தூல சடாதாரத்தில் (ஆறு ஆதாரங்களில்) எழுந்தருளியிருக்கும் வெண்மை நிறத்தையுடைய கலைவாணியின் திருவடிகளும், பிரம தேவனின் திருவடிகளும், விட்டுணுவின் திருவடிகளும், திருவருள் கடாட்சத்தையுடைய இலக்குமிதேவியின் திருவடிகளும், உருத்திர மூர்த்தியின் திருவடிகளும், அவன் மனைவி வாமிதேவியின் திருவடிகளும், அண்டகடாகமெலாம் வியாபித்திருக்கும் (சர்வ வியாபகன்) மகேசனின் திருவடிகளும், அவன் மனைவி மயேஸ்வரியின் திருவடிகளும், யாருடைய நாவாலும் இவன் இத்தன்மையன் என இயம்பமுடியாத சதாசிவனின் திருவடிகளும், அவன் மனைவி மனோன்மணித் தாயின் திருவடிகளும், இவைகளுக்கெல்லாம் மேற்பட்ட பதவியையுடையவனாம் சாம்பசிவ மூர்த்தியின் திருவடிகளும் (இந்நூல் இனிதே முடிவுற) சதாகாலமும் காவலாம்.

மேற்கூறிய தேவர்களின் திருவடிகளை வணங்குதல் நூல்பரம்பரையாம்.

0 Comments: