Saturday, December 29, 2007

78.விந்தெனவு நாதம்வந்த வாறு

ஞானம் எட்டி
**************
78.விந்தெனவு நாதம்வந்த வாறுஞ் சொன்னேன்
வெளிகடந்து வந்தவகை விபரஞ் சொன்னேன்
அந்தவிடை பிங்கலையில் மாறல் சொன்னே

னதுகடந்து சுழிமுனையை யறியச் சொன்னனேன்

விந்தைமய லாசையது வொழியச் சொன்னேன்
விட்டகுறை தொட்டகுறை விபரஞ் சொன்னேன்
அந்ததிசை யதிசயமு மகற்றச் சொன்னே

னருள்சொன்னேன் பொருள்சொன்னே னறிவுள் ளோர்க்கே



மயல் = உன்மத்தம், பயம், மயக்கம், பைத்தியம்

விந்து தத்துவம், நாத தத்துவம், பிறந்த விதம், இடைகலை பிங்கலைகள் மாறிவந்த விதம், அது கடந்து சுழிமுனை அறியும் முறை சொன்னேன்; ஆணவமாயைகளால் விளையும் மயக்கத்தை நீக்கிக் கொள்ளும் விதத்தையும், விட்டகுறை, தொட்டகுறைகளின் விவரத்தையும், அவைகளினால் உண்டாகும் அற்ப ஆனந்தத்தை நீக்கும் விதத்தையும் சொன்னேன். திருவருளின் தன்மையையும், அதன் பொருளையும் அறிவுள்ளவருக்கு மட்டும் நான் சொன்னேன்.

0 Comments: