விவேக சிந்தாமணி
*********************
தலைவன் வருந்துதல்
**************************
76.அன்னம் பழித்தநடை யாலம் பழித்த விழி
...............யமுதம் பழித்த மொழிகள்
பொன்னம் பெருத்தமுலை கன்னங் கறுத்தகுழல்
..............சின்னஞ் சிறுத்தவிடை பெண்
என்னெஞ் சுருக்கவவ டன்னெஞ்சு கற்றகலை
.............யென்னென் றுரைப்பதினி நான்
சின்னஞ் சிறுக்கியவள் வில்லங்க மிட்டபடி
.............தெய்வங்களுக் கபயமே!
அன்னத்தைப் பழிக்கும் நடையும் நஞ்சைப் பழிக்கும் வேல்போன்ற கண்களும், அமுதத்தைப் பழிக்கும் மொழிகளும், பொன்போலும் பெருத்த தனங்களையும், கன்னங்கரிய கூந்தலையும், சின்னஞ் சிறிய இடையும் உடைய பெண்ணானவள் என் நெஞ்சை உருக்க, அவள் கற்ற மாயக் கலைகளையும், இனி நான் என்ன சொல்லுவேன்? அச் சிறுக்கியால் நான் அடைந்த தொல்லைகட்குத் தெய்வத்தை நோக்கி முறையிடுவது அல்லாது என்னால் செய்யத் தக்கது யாது?
Monday, December 31, 2007
76.அன்னம் பழித்தநடை யாலம் பழித்த
Posted by ஞானவெட்டியான் at 9:57 AM
Labels: விவேக சிந்தாமணி
Subscribe to:
Post Comments (Atom)
2 Comments:
அதற்குப் பெயர் தான் காமம்
அன்பு என்னார்,
கண்மூடிக் காமத்துக்குத்தான் தலைவன் புலம்புகிறான்.
Post a Comment