Saturday, December 29, 2007

75.நகாரம காரமுட னாடுசி காரமதாய

ஞானம் எட்டி
75.நகாரம காரமுட னாடுசி காரமதாய
வகாரமிரு காலாய் வளர்ந்ததுகாண் யகாரமது
அஞ்சறி வாய்நின்ற தடங்கப் பெரும்பூத

மஞ்சும் வளாந்ததுகா ணாண்டே.


"ந"காரம் இரண்டும் காலாய் உருவானது.
"ம"காரம் இரண்டும் வயிற்றுப் பகுதியாய் வளர்ந்தது.
"சி"காரம் இரண்டும் ஆடும் தோளாக மாறியது.
"வ"காரம் இரண்டும் கால் என்னும் காற்று செல்லுக் குழலாய் ஆனது.
"ய"காரம் இரண்டும் இறைவனின் திருவடியாம் கண்ணாய் வளர்ந்தது.
ஆகிய இவ்வைந்து பூதங்களாலும் மனித உடலாய்க் கரு வளர்ந்தது.

சிவவாக்கியர்
******************
"நவ்விரண்டு காலதாய் நவின்றமவ் வயிறதாய்
சிவ்விரண்டு தோளதாய் சிறந்தவவ்வு வாயதாய்
யவ்விரண்டு கண்ணதாய் அமர்ந்து நின்ற நேர்மையில்
செவ்வைஒத்து நின்றதே சிவாயநம அஞ்செழுத்துமே!"

இப் படம் காண்க.



இங்கு தாள் என்பது சிவனின் மலர்ப்பாதம். நம் உடலில் மலர் போன்ற பகுதி நம் கண்களே. அதுவே இறையின் மலர்ப்பாதங்கள். இவைகளைப்(சூரியகலை, சந்திரகலை) பயன்படுத்தி, அக்கினி கலையுடன் கூட "நமசிவய" எனும் மந்திரம் நம்முடலினுள்ளே கேட்கும்.

0 Comments: