Monday, December 31, 2007

74.நற்குண முடையவேந்தன் நயந்து

விவேக சிந்தாமணி
********************
74.நற்குண முடையவேந்தன் நயந்து சேவித்தலொன்று
பொற்புடை மகளிரோடு பொருந்தியே வாழ்தலொன்று

பற்பல ரோடுநன்னூல் பகர்ந்து வாசித்தலொன்று

சொற்பெறு மிவைகண்மூன்று மிம்மையிற் சொர்க்கந்தானே.


நல்ல குணம் பொருந்திய அரசனை விரும்பிப் பார்த்தலும்(அவனிடம் பணிபுரிதலும்), நற்குணமிகுந்த அழகிய இல்லாளுடன் இல்லறம் நடத்தலும், கல்வியிற் சிறந்துவிளங்கும் குருவுடனும் அவர்தம் மாணாக்கரொடும் நல்ல பல நூல்களை ஐயமின்றிக் கேட்டுப் பயில்தலும், ஆகிய இம்மூன்று காரியங்களும் இவ்வுலகில் இப்பிறப்பில் சொர்க்கமே.

4 Comments:

Anonymous said...

உண்மை உண்மை. முழுக்க முழுக்க உண்மை ஐயா.

Anonymous said...

அன்பு குமரன்,
மிக்க நன்றி.

Anonymous said...

சொர்க்கத்தை ரொம்ப கஷ்டப்பட்டு தான் தேடி கண்டுபிடிக்கவேண்டியுள்ளது.

Anonymous said...

அன்பு குமார்,
சொர்க்கமும் நரகமும் நமக்குள்ளேதன் உள்ளது. தேடுங்கள்; கிட்டும்.
நன்றி.