Saturday, December 29, 2007

73.வந்து தசநாதவிந்து சுழி

ஞானம் எட்டி
**************
73.வந்து தசநாதவிந்து சுழிமுனையின்
வாசலின் கருக்குழிதன் வீட்டுக்குள்ளே
தந்திரம தாகவேதான் கருவதனில்
சங்கற்ப மில்லாமல் கலந்துறைந்ததுகாண்
விந்தை யெனுநாதவிந்து சையோகந்தனில்
விற்பனம்போலவுமெய்து முற்பனமதாய்
சுந்தர சுக்கிலசுரோணித மிரண்டுங்கூடிச்
சொப்பனம் போலுமுதித்த சூக்குமமிதுகாண்

இங்ஙனமாக வந்த பத்துவித ஒலிகளைத் தன்னகத்தே அடக்கிய விந்து சுழிமுனையிலிருந்து ஒழுகி, அதன் வாயிலில் உள்ள கர்ப்பையின் குழியில் தந்திரமாக விழுந்து, அங்கு உண்டாகி இருந்த அண்டத்தின் உட்புகுந்து, அழகாக ஒன்றுசேர்ந்து திரண்டு, ஒரு சொப்பனம்போல் கரு உத்தித்தது காண்பீரே!

பட்டினத்தார்:
ஒருமடமாதும் ஒருவனுமாகி இன்பசுகந் தரும்
அன்பு பொருந்தி உணர்வு கலங்கி ஒழுகிய விந்து
ஊறு சுரோணித மீது கலந்து
பனியில் ஓர்பாதி சிறுதுளிமாது பண்டியில்வந்து
புகுந்துதிரண்டு பதுமஅரும்பு கமடம் இதென்று...

2 Comments:

Anonymous said...

ஆமாம்,இந்த பாடல்களின் வயது என்னங்க??

Anonymous said...

அன்பு குமார்,
எனக்குத் தெரியவில்லை.
1919ம் ஆண்டு படி எடுக்கப்பட்ட ஓலைச் சுவடியிலிருந்து நான் படி எடுத்துச் சேமித்து வைத்துள்ளேன்.