விவேக சிந்தாமணி
*********************
72.மண்ணார் சட்டி கரத்தேந்தி மரநாய் கௌவுங் காலினராய்
அண்ணாந்தேங்கி யிருப்பாரை யறிந்தோ மறிந்ததோ மம்மம்மா
பண்ணார் மொழியார் பாலடிசில் பைம்பொற் கலத்தில் பரிந்தூட்ட
உண்ணா நின்ற போதொருவர்க் குதவா மாந்த ரிவர்தாமே.
மண்ணால் செய்த சட்டியைக் கையிலேந்தி தெருநாய் விரட்டிக் காலைக் கெளவ, அண்ணாந்து பசியினால் ஏக்கமுற்று உணவு(பிச்சை) எங்கே கிடைக்கும் என வாடியிருக்கிற பிச்சைக்காரரைத் தெரிந்துகொண்டோம். அவர் யாரெனில், மனதை மயக்கும் இசை போல் சொற்களை உடைய மனைவியர், பொன் தட்டில் பால் சோற்றைத் தம் கணவருக்கு ஊட்டும்பொழுது, பிச்சை கேட்டு வந்த ஒருவருக்கு அன்னம் அளிக்காத மாந்தர் ஆவார். இவ்வளவு செல்வம் இருந்தும் பிச்சையிடாதோரே அடுத்த பிறவியில் பிச்சை எடுப்பவராம்.
Monday, December 31, 2007
72.மண்ணார் சட்டி கரத்தேந்தி
Posted by ஞானவெட்டியான் at 9:50 AM
Labels: விவேக சிந்தாமணி
Subscribe to:
Post Comments (Atom)
2 Comments:
//இவ்வளவு செல்வம் இருந்தும் பிச்சையிடாதோரே அடுத்த பிறவியில் பிச்சை எடுப்பவராம். //
ஐயா,
ஈகை என்பது இல்லாதோர் பிறர்மீது அன்பு வைத்து பகிர்த்தல்,
ஈகையை விளக்க பயமுறுத்தத்தான் வேண்டுமா ?
அன்பு கண்ணன்,
//ஈகையை விளக்க பயமுறுத்தத்தான் வேண்டுமா ?//
ஆமாம். நயமாகயச் சொல்லியாகிவிட்டது. இப்பொழுது பயமுறுத்தவேண்டிய கட்டாயம்; கலி முத்திவிட்டது.
"சாம பேத தான் தண்டம்"
Post a Comment