Monday, December 31, 2007

71.ஏரிநீர் நிறைந்தபோதங் கிருந்தன

விவேக சிந்தாமணி
*********************
71.ஏரிநீர் நிறைந்தபோதங் கிருந்தன பட்சியெல்லாம்
மாரிநீர் மறுத்தபோதப் பறவையங் கிருப்பதுண்டோ?

பாரினை யாளும்வேந்தன் பட்சமு மறந்தபோதே

யாருமே நிலையில்லாம லவரவ ரேகுவாரே.


ஒரு குளத்தில் நீர் பெருகியிருக்கும்பொழுது அதிலே பறவைகள் எல்லாம் இரை கிடைப்பதால் கூடியிருக்கும். மழையின்றி, அக்குளத்தில் நீர் வற்றியபோது, பறவைகளுக்கு இரை கிடைப்பது அரிதாகையால் அவை பறந்துவிடும். அதுபோல, நாட்டை ஆளும் அரசன் இரக்கமுள்ளவனாக இருந்தால், நமக்கெல்லாம் நல்லது நடக்குமென எண்ணிக் குடிமக்கள் அந்நாட்டில் நிறைந்து இருப்பார்கள். அன்பு செய்யவேண்டும் எனும் எண்ணத்தை அரசன் மறந்தால், மக்களும் இடம்பெயர்ந்து போய்விடுவார்கள்.

ஒளவையின் மூதுரை சொவது:

"அற்ற குளத்தில் அறுநீர்ப் பறவைபோல்
உற்றுழித் தீர்வர் உறவல்லர் -அக்குளத்தில்
கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே
ஒட்டி உறுவார் உறவு"


2 Comments:

Anonymous said...

ஐயா!
"அற்ற குளத்தில் அறுநீர்ப் பறவை யென " ஓர் பாடலும் உண்டு.
இதே கருத்தில் யார் பாடியதெனவோ? முழுப்பாடலோ தெரியாது.
யோகன் பாரிஸ்

Anonymous said...

அன்பு யோகன்,
நம் ஒளவயார் எழுதிய "மூதுரை"தான்.

"அற்ற குளத்தில் அறுநீர்ப் பறவைபோல்
உற்றுழித் தீர்வர் உறவல்லர் -அக்குளத்தில்
கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே
ஒட்டி உறுவார் உறவு"