Saturday, December 29, 2007

71.வந்து திருமூலத்திலும் பானு

ஞானம் எட்டி
*************
71.வந்து திருமூலத்திலும் பானுவிருக்கும்
வச்சிரவளர் சதுட்கோணவாசலிலும்
சுந்தர விந்ததிலும்வந்து சினேகமது
சோதித்துக் கலந்துற வாடிக்கொண்டே
இந்திர பதவிகளெனவே என்னாண்டையேகேள்
இங்கித நாதசங்கீத மங்களமதாய்
சந்திரபுட்கரணிவரும் நந்திப்பிரகாசந்
தாரையதுவே முழங்குஞ் சாரையைக்கண்டேன்.

அங்ஙனம் மூலத் தானத்துக்கு வந்தபின்பு, நான்கு அங்குலம் மேலே போய் சூரியனிருக்கும் நான்கு கோணத்தை உடைய சுவாதிட்டானத்தின் வாசலில் அழகிய விந்துவிற் கலந்து உறவாடிக் கொண்டிருந்து இந்திரபதவியை அநுபவிப்பதுபோல, என் ஆண்டையே கேளும்; சந்திரச் சுனையிலிருந்து நந்தியின் ஒளி உருவாய்த் தாரை தப்பட்டை முழக்கத்து ஒலியுடன் ஓடிவரும் விந்து ஓடிவரும் வாய்க்காலைக் கண்டேன்.

கொப்பூழ் - சுவாதிட்டானம்
*************************
இது மூலாதாரத்திற்கு நான்கு அங்குலம் மேல் உள்ள இலிங்கத்துக்கும், நாபி எனப்படும் கொப்பூழுக்கும் நடுவில் உள்ளது. நாபியைக் குய்யம் என்பதுவுமுண்டு. இது நாற்சதுர வீடு. இதன் நடுவில் ஆறிதழ் தாமரை வட்டமும், அதன் நடுவே "ந"கார எழுத்தும் உடையது. அந்த நகார வட்டமாம் இலிங்க பீடத்தின் நடுவே அக்கினிபோல் செந்நிறத்தையுடைய பிரும்மனும், சரசுவதி தேவியும் கொலுவீற்றிருப்பதாகச் சொல்லப்பட்டுள்ளது.

போகர்
*****
"துதிசெய்து மூலத்தைத் தாண்டியப்பால்
......துடியான வொருநாலங் குலமே தாண்டப்
பதிசெய்த பிரமனுட வீடு மாகும்
......பகர்ந்தசுவா திட்டான மென்னும் பேரு
அதிசெய்த நாலுவட்டம் வளையஞ் சுத்தல்
......ஆறிதழ்தான் அட்சரத்தை அறியக் கேளே."

ஞானம் எட்டி
***********
"கதிரொத்த விடந்தனிலே யிலகுஞ் சோதி
.......கனகரத்ன மிலகுதிரு மண்ட பத்தில்
மதியொத்து நின்றிலங்குஞ் சுவாதிட் டானம்
.......வளர்ந்தவித ழிம்மூன்றா மங்கு லத்தில்
நிகரொத்த பிரமன் சரசு வதியின் பாதம்
.......நினைந்துருகித் தாளிணையைப் போற்றி செய்து
உதிரத்தில் சுக்கிலந்தான் வந்த வாறு
.......மோரெழுத்தா நாதவிந் தமைத்த வாறே."

திருமந்திரம்
**********
"நாவுக்கு நாயகி நன்மணி பூணாரம்
பூவுக்கு நாயகி பொன்முடி யாடையாம்
பாவுக்கு நாயகி பாலொத்த வண்ணத்தாள்
ஆவுக்கு நாயகி அங்கமர்ந் தாளே."

0 Comments: