Saturday, December 29, 2007

70.கொண்டபதி மண்டபம்விட்டு

ஞானம் எட்டி

**************

70.கொண்டபதி மண்டபம்விட்டுக் கருவிகளின்
கூடிய திருமுகப்பூஞ் சோலையிலே
அண்டர்களருள் போற்றுங் கணபதியின்
அடியினருள் துதித்து அடியில்வந்தேன்
குண்டலி கமலமலர் மேன்மேலவர்தன்
கோபுரச் சித்திரமதிலின் வாசல்விட்டு
மண்டலஞ் சூழுங்கதிர் வலமிடைபின்
மலரடி தொழுதுயான் வணங்கிவந்தேன்.

அந்த மண்டபத்தைவிட்டு உடலின் உறுப்புக்களுடைய உள்முகமாகத் திருப்பி அவற்றை கடந்த தலமாம் பூஞ்சோலையில் தேவர்களெல்லாம் திருவருளைப் பெற வணங்கும் கணேசமூர்த்தியின் திருவடிகளைத் துதித்தேன். அந்த இடமாகிய மூலாதாரத்திற்கு அடியில் வந்துகுண்டலி சத்தியினுடைய திருவடிகளை வணங்கி அவள் எழுந்தருளியிருக்கின்ற கோபுர வாயிலில் இருந்துகொண்டு சூரிய, சந்திர, அக்கினி கலைகளை ஒன்றாய்ச் சேர்த்து மேலெழுப்பித் தொழுது வணங்குகிறவன் நானாவேன்.

மூலம் என்னும் மூலாதாரம்
******************************
குதம் என்னும் மலவாய்(எருவாய்), நீர்த்தாரை(மரும இடம்) ஆகியவற்றின் நடுவில் குண்டலி வட்டமும், அதனுள்ளே முக்கோண சக்கர வடிவமும், அதன் நடுவே நான்கு இதழ்கொண்ட கடம்ப மலரும், அதன் உள்ளே ஓங்கார வட்டமும், அதனுள்ளே "ஓம்" என்னும் பிரணவமும் அமைந்திருக்கும். ஓங்காரத்தில் ஒளிவீசும் "அ"காரத்தில் மாணிக்க வண்ணமுடைய கணேசரும், முக்கோணத்தில் ஒளிவீசும் "உ"காரத்தில் மரகத வண்ணமுடைய வல்லபை சக்தி அமர்திருக்க, கோணத்தின் முனையில் குண்டலி சக்தியானவள் எட்டு இதழ்களுடைய வாழைப்பூ தலைகீழாகத் தொங்குவதுபோலிருப்பாள். இவ்வெட்டு இதழ்களும் அட்டசக்திகளெனப்படும் எட்டு இலக்குமிகளாவார்கள்.

மண்(பிருதிவி) தத்துவம் .

போகர்:
******

1."காணவே மூலமது அண்டம் போலக்
..............காரணமாய்த் திரிகோண மாக நிற்கும்
பூணவே மூன்றின்மேல் வளைய மாகும்

.............புறம்பாக இதழதுதான் நாலு மாகும்

நாணவே கமத்தட் சரத்தைக் கேளு

............நலமான வயநமசி ரீரீ யாகும்

மூணவே முக்கோணத் தொளிவோங் காரம்

...........முயற்சியா யதற்குள்ளே அகார மாமே."


2."அகரத்தின் மேலாகக் கணேசன் நிற்பார
..........ஆதியொரு கோணத்தில் உகாரம் நிற்கும்
உகாரத்தில் வல்லபையாள் சத்தி நிற்பாள்

.........ஒடுங்கியதோர் முனையொன்றிற் கதலிப் பூவாய்

புகாரமாய் முகங்கீழ்குண் டலியாஞ் சத்தி

.........பெண்பாம்பு போற்சுருட்டிச் சீறிக் கொண்ட
சுகாரமாய்ச் சுழிமுனையோ டுருவி நிற்பாள்
........துரியாதீ தம்மென்ற அவத்தை தானே."


3."ஓங்கியே மாணிக்கத் தொளீபோல் தோன்றும
........உத்தமனே மூலத்தி னுண்மை காணும்
தேங்கியே வல்லபையாஞ் சத்தி தானும்

.......சிறந்திருந்தாள் பச்சைநிற மாகத் தானே"


4."பச்சைநிறம் வல்லபையைப் பணிந்து போற்று

.......பாங்கான ஆறுக்கும் பருவஞ் சொல்வாள்

மொச்சையாய் மூலமது சித்தி யானால்

.......மூவுலகுஞ் சஞ்சரித்துத் திர்ய லாமே."


ஞானம் எட்டி:-

**************

1."மதியிருந்து குமுறி விளை யாடும் வீடு
......மகத்தான செங்கதிரோன் மகிழ்ந்த வீடு
பதியிருந்து விளையாடு மூல வீடு

......பத்திதரும் சித்திதரும் பரம வீடு

துதிபெறவு நாற்சதுர மேலு நின்று துலங்கு
.....மெழிற் கணபதி வல்லபையைப் போற்றி
நிதிபெறவு மெனையீன்ற குருவின் பாதம்

.....நெகிழாம லனுதினமுங் காப்புத் தானே."


2."திருவிருந்து கனலெழுந்து ஆடும்வீடு
.......சிறந்தசத்தி வல்லபைதன் கணவ னான
மருவிருந்து கொஞ்சு தமிழ் நாவில்மேவு
.......மகிழ்ந்த மதகரி யினிரு தாளைப் போற்றி
கருவிருந்த பெருவீடு தாண்டி யப்பால்

.......கண்குளிர நின்று நடுவணையி லேறி

மருவியுயிர் நாதவிந்து ஆயி பாதம் வணங்கியிந்த
.......நூல் வகையைப் புகல்வே னாண்டே."

3."தந்திரமாய் முக்கோணந் தன்னில் நின்ற

தந்திமுகன் கமலபதங் காப்புத் தானே."


திருமந்திரம்:-

**********

"எருவிடு வாசற் கிருவிரன் மேலே

கருவிடும் வாசற் கிருவிரற் கீழே

உருவிடு சோதியை யுள்கவல் லார்க்குக்

கருவிடுஞ் சோதி கலந்துநின் றானே."

0 Comments: