Sunday, December 30, 2007

திருவாசகம் - 6.வேகங் கெடுத்தாண்ட வேந்தனடி

திருவாசகம்
**************

6.வேகங் கெடுத்தாண்ட வேந்தனடி வெல்க

சலனமென்பது தோன்றவிருக்கும் நிலை. சலனமே பிரபஞ்ச உற்பத்திக்குக் காரணம்.

சித்தமாகிய மனம் ஒரு தெளிந்த தடாகம். சேற்று நீர் இல்லை. அலை வீசவில்லை. அதனால் அடியில் உள்ள மண் தரை தெரியும்.

மனிதனின் கண் திறந்ததுமே மனம் விழிக்கிறது. கண்போன போக்கில் மனம் செல்கிறது. அதனால் எண்ணங்கள் கொப்பளித்து ஒன்றையொன்று போட்டி போட்டுக்கொண்டு மேலே எழும்புகிறது. தடாகம் குழம்பி விடுகிறது.

எண்ணங்களே பிறவிக்கு மூல காரணம். அதனால் பிறவிகள் பெருகுகின்றன. எண்ணங்களுக்கு வலிவு கொடுப்பது ஆசை. ஆசையின் இருப்பிடம் மடமையாம் இருள். இறையருள் பார்வை பட்டவிடமெலாம் மடமை நீங்குகிறது. ஆசைகள் அறுபடுகின்றன்றன. அதனால் எண்ணங்களின் நொதிப்பு(fermentation) நீங்கிக் கொஞ்சம் தெளிவு கிட்டுகிறது. பின் எண்ணங்களின் உற்பத்திசாலையாம் மனதின் கொதிப்பு குறைகிறது.

மனமடங்கிய நிலையில் இறையருள் கிட்டுகிறது. இறையருள் கிட்டினால் எதுவும் கிட்டுமன்றோ?

ஆகவே, மனோவேகங் கெடுத்து என்னைத் தடுத்தாட்கொண்ட மூலப்பொருளாம் இறைவனின் பாதகமலங்களுக்கு வெற்றி உண்டாகுக என்றார்.

4 Comments:

Anonymous said...

ஆசை என்று ஒன்று இருப்தாலே தான் மனிதன் முன்னேறமுடிகிறது.

Anonymous said...

அற்புதமான விளக்கம் ஞானவெட்டியான். நான் கூட இந்த வேகம் கெடுத்து ஆண்டதை....கங்கையின் வேகம் கெடுத்து ஆண்டதாக முதலில் நினைத்தேன். பிறகு அப்படியிருக்காது என்று மனதுக்குத் தோன்றியது. ஆனால் அது குறித்து நிறைய சிந்திக்கவில்லை. இன்று நீங்கள் அழகாகத் தெளிவுறுத்தியிருக்கின்றீர்கள். மிக்க நன்றி.

Anonymous said...

தங்கள் ஆன்மீகம் கமழும் வலைப்பூ தெய்வீக மணம் வீசுகின்றது..!

Anonymous said...

அன்பு வாசுதேவன் இலட்சுமணன்,
தங்களின் கருத்துக்கு நன்றி.