Monday, December 31, 2007

68.தந்தையுரை தட்டினவன் றாயுரை

விவேக சிந்தாமணி
*********************
68.தந்தையுரை தட்டினவன் றாயுரை யிகழ்ந்தோன்
அந்தமுறு தேசிகர்த மாணையை மறந்தோன்

சந்தமுறு வேதநெறி தாண்டினவிந் நால்வர்

செந்தழலின் வாயினிடை சேர்வது மெய்கண்டீர்.


தந்தை சொல் மிக்க மந்திரமில்லை; தாய் சொல்லைத் தட்டாதே! என்னும் மூதுரையை மறந்தவர்களுக்கு அறிவுரை. தந்தை சொல் தட்டியவன், தாய் சொல்லை இகழ்ந்தவன், அழகு பொருந்திய ஆசானின் கட்டளையை மறந்து மீறியவன், நற்குணம் நிறைந்த நீதிநூல்களின் அறிவுரைகளைத் தாண்டியவன் ஆகிய நால்வரும் சிவந்த தீயைப்போன்ற நரகுலகில் வீழ்வார்கள்; கண்டீரோ!

2 Comments:

Anonymous said...

ஹ்ம்ம் அருமையான செய்யுள் ஐயா,...

இந்த தலைமுறைக்கு அவசியம் சொல்ல வேண்டியது

நன்றி

Anonymous said...

அன்பு மங்கை,
இந்தத் தலைமுறையினர் எங்கே கேட்கிறார்கள்? ஏதேனும் சொன்னால் "கிழங்கள் ஏதாகிலும் சொல்லிக்கொண்டேதான் இருக்கும்" என்று சொல்லிவிட்டுப் போய்விடுவார்கள்.
பட்டபின்புதான் தெரியும் தீ சுடுமென.