Monday, December 31, 2007

69.நாரிகள் வழக்கதாயி னடுவறிந் துரைப்பார்

விவேக சிந்தாமணி
*********************
69.நாரிகள் வழக்கதாயி னடுவறிந் துரைப்பார் சுத்தர்
ஏரிபோல் பெருகிமண்மே லிருகணும் விளங்கிவாழ்வார்

ஓரமே சொல்வாராகி லோங்கிய கிளையுமாண்டு

தீரவே கண்களிரண்டும் தெரியாது போவர்தாமே.


தங்கள் வழக்கை எடுத்துரைக்கத் தெரியாத ஏழைப்பெண்களின் வழக்காயிருந்தாலும், அதை நன்கு ஆய்ந்து அறிந்து நடுநிலை தவறாது தீர்ப்பு அளிக்கும் தூய்மை உடையோர் நீர்நிறைந்த குளம்போல் நன்மைகள் பெருகி இம்மண்ணுலகில் இருகண்களும் பிரகாசமாக ஒளிவீச நீண்டகாலம் வாழ்ந்திருப்பர். ஒருபக்கம் சார்ந்த தீர்ப்பை அளிப்பவர்கள், தன் சுற்றமாகிய கிளைகள் மாண்டு இரு கண்களும் கெட்டுத் துன்பம் அடைந்து இறப்பார்கள்.

4 Comments:

Anonymous said...

தலைப்பில் விவேக சிந்தாமணி என்று போட்டிருந்ததோ பிழைத்தேன்.பள்ளி காலங்களில் கேள்விப்பட்டதோடு சரி,படித்த நினைவில்லை.
இப்போதாவது தங்கள் உதவியுடன் படிக்க முடிந்ததே!!
நன்றி

Anonymous said...

அன்பின் குமார்,
மிக்க நன்றி

Anonymous said...

ஆகா. நடுநிலை தவறித் தீர்ப்பளிப்பவர்களுக்கு எத்தனை கொடுமைகள் நிகழும் என்பதையும் நடுநிலை நிற்பவர்களுக்கு எத்தனை நன்மைகள் விளையும் என்பதையும் நன்கு சொல்கிறது ஐயா இந்தப் பாடல். வடுவூர் குமார் சொன்னது போல் உங்கள் தயையினால் தான் இந்த நன்மொழிகளை எல்லாம் படிக்கக் கிடைக்கிறது. மிக்க நன்றி.

Anonymous said...

அன்பு குமரா,
மிக்க நன்றி.
யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்.