Saturday, December 29, 2007

68.நின்றுபதியம் பரம்விட்டு

ஞானம் எட்டி
**************
68.நின்றுபதியம் பரம்விட்டு நிலைபிசகா
நினைவுக்கரிய தொரு பொறிகடந்து
வேண்டிய வரமருளும் திருமால்திரு
மெல்லடி பணிந்து பதம்வணங்கியபின்
சென்றுமூலவாசியைக் கொண்டு இராசயோகந்
தேவப்பிரகாசமூல கேசரத்தில்யான்
ஒன்றித்தவ நெறிபிசகா ரேசிக்கவிருள்

ஓடியேமூலாக்கினி நாடிவணங்க.


தாமரைச் சிம்மாதனத்தில் நிலை பிசகாமல் ஏறி நின்றபின் நினைவுக்கு அரியதொரு பொறியாம் கபாலக்குழியை விட்டு அவரவர்களுக்கு வேண்டிய வரங்களைக் கொடுக்கின்ற திருமாலாம் முகுளத்தின் திருவடிகளை வணங்கிப்பின் மூலாதாரத்தின் உயிராம் வாசிகொண்டு இரேசக, பூரக, கும்பகம் செய்து இராசயோகம் பயின்றுகொண்டு மூலாதார ஒளியில் மூழ்கி நெறி பிசகாது தவம் செய்து மாயையென்னும் இருளை விரட்டி உள்ளே ஓடிய மூல அக்கினியைத் தேடி வணங்கினேன்.

0 Comments: