Saturday, December 29, 2007

67.தெண்டனிட்டு மண்டபம்விட்டு

ஞானம் எட்டி
***************
67.தெண்டனிட்டு மண்டபம்விட்டுக் கருவூர்தனில்
சித்திரப் பூஞ்சாவடிதன் முகப்பும்விட்டு
தொண்டர்கள் பணியும்ருத்திரன் திருவடியைத்
தொழுதனுதினம் பணிந்து துதித்துநின்றேன்
அண்டர்கள் போற்றுகின்ற பிரகாசவொளி
அவ்விடத்தி லேமனதை யடக்கியேகாண்
கண்டு களிகூர்ந்துமிக மதியின்மலர்
கங்கையத்தின் பங்கயக்கண் சிங்காதனத்தில்.

அங்ஙனம் மண்டியிட்டு வணங்கி அந்த மண்டபத்தைவிட்டுக் கருவூரென்னும் கருப்பையினுள் இருக்கும் சித்திரப்பூ சாவடியின் முகப்பை விட்டுத் தொண்டர்கள் பணிந்து வணங்கும் ருத்திரனின் திருவடியாம் கண்களின் வழியே துதித்து நின்றேன். அதுவே தேவர்கள் போற்றித் தொழும் திருவடி. அங்கிருந்துதான் பிரகாச ஒளி வருகிறது. அங்கே துடிக்கின்ற மனமாம் சந்திரனை (இடக்கண்=மலர் கங்கை) சூரியகலையில் சேர்த்து ஆயிரவிதழ் தாமரைச் சிம்மாதனதில் ஏற்றி நின்று மனத்தினை ஒரு வழிப்படுத்திக் களிந்திருந்தேன்.

0 Comments: