ஞானம் எட்டி
**************
66.போற்றிய மண்டபம்விட்டு மறையவர்தன்
புகழுஞ் சிங்காரமெனும் புரவிவிட்டு
சாற்றியமயேசுபரத்தில் சம்பிரமத்துடன்
சத்திரத்தில்வந்து சித்திரச்சாவடியினில்
காத்திருந்தேன் திருநடனம் ரத்னமணி
கனக சபையைக்கண்டு நான்மகிழ்ந்தேன்
பூத்த செழுங்கமலமலர் இங்கிதநாதப்
பொக்கிடத்தைக் கண்டறிந்துயான் மகிழ்ந்தேன்காண்.
சம்பிரமம் = மகிழ்ச்சி
அப்படி வணங்கிய மண்டபத்தை விட்டு, மறையவர்கள் புகழும் வாசி என்னும் குதிரையையும் விட்டுவிட்டுக் கால்நடையாய்ப் வந்து மகிழ்ச்சியுடன் மயேசுவரன் இருக்குமிடமாம் சத்திரத்தில் உள்ள சித்திரச் சாவடியாம் முகத் தாமரையில் காத்திருந்தேன். ஆங்கே, கனகசபை திருநடனமாடும் கண்மணியாய்க் காட்சி தந்தார். அதன் வழி உள்ளே சென்று, ஆன்மக் கருவூலம் உள்ள ஆகாயத்தாமரையில், நாதமாம் சிவத்தைக் கண்டு உணர்ந்து மகிழ்ந்தேன் நான்.
Saturday, December 29, 2007
66.போற்றிய மண்டபம்விட்டு
Posted by ஞானவெட்டியான் at 5:42 PM
Labels: ஞானம் எட்டி
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment