ஞானம் எட்டி
**************
65.வருகிற வழியதனில் நவரத்ன
மண்டபத்துக்குள் ளேவச்சிரப் பையதனில்
பெருகிய நாதமது சதாசிவத்தின்
பிரணவ மூலப்பிரகாசப் போரொளியினில்
உருவிய மலர்க்கமலம் போற்றியருள்
உற்பன மருள்தருங் கற்பகத்தில்வாழ்
அருள் வந்தெய்திடினுந் திருவடியதின்
அனுதினம் பூசித்துமிகவடி பணிந்தேன்.
அப்படி வருகிற வழியிலே நவரத்தின மண்டபமாம் இவ்வுடலில் உள்ள வச்சிரம் போல் உறுதியான கருப்பையில் ஒழுகிய நாதமானது, பிரணவமாயுள்ள சதாசிவன் எழுந்தருளியிருக்கிற மூலாதாரப் பேரொளியில் கலந்து உருவிய மலர் போன்ற உந்திக்கமலத்தை அடைகிறது. அங்குள்ள தாயின் கருப்பத்தில் தங்கியிருந்து அவ்விடத்தில் திருவருள் கிடைக்கப்பெற்று உடலும் உள்ளமும் உருவாகிறது. அப்படிப்பட்ட சதாசிவனுடைய திருவடிகளில் சதாபூசித்துப் பணிந்தேன்.
Saturday, December 29, 2007
65.வருகிற வழியதனில் நவரத்ன
Posted by ஞானவெட்டியான் at 5:41 PM
Labels: ஞானம் எட்டி
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment