Saturday, December 29, 2007

64.வன்னியும் வாயுவுங்கூடி

ஞானம் எட்டி
**************
64.வன்னியும் வாயுவுங்கூடி உயர்கின்ற
மண்டபமார்க்கத்தின் வீதிதனிலே
உன்னதமாய்நா தவிந்து உறவாடியுமே
ஒருவழி யாகவந் துதித்ததுகாண்
முன்னிலையாய்ச்சுடரதனில் மூலவன்னி
முப்பொருளுஞ்சேர்ந்து வொரு வுற்பனமதாய்ச்
சென்னி தனில்வளரியல்பாம் நாதமெனுஞ்
சித்திரப்பூஞ்சாவடியில் மத்திபத்திலே.

தீயாகிய தேயுவும், வாயுவும், ஒன்றாகச் சேர்ந்து முட்டிக் கிளம்புகின்ற மண்டபத்தின் வழியிலுள்ள வீதியில் (அக்கினி மண்டலத்தில்) உன்னதமாக நாதமும், விந்துவும் கலந்து உறவாடி ஒரேவழியில் வந்து உதித்தது கண்டீரோ?
தீச்சுடரையே முதற்காரணமாகக் கொண்டு மற்றைய மண், வாயு, ஆகாய தத்துவங்களுடன் சேர்த்து விநோதமாகத் தலையில் உள்ள ஆகாயத் தாமரையாம் மலரின் நடுவில் நாத தத்துவம் வளருகின்றது.

0 Comments: