Saturday, December 29, 2007

63.ஆவிடையார் கோயிலிலே

ஞானம் எட்டி
**************
63.ஆவிடையார் கோயிலிலே யமைத்தகுறி
ஆதரவாக வேசேர்ந்து மாதர்களினால்
மேவியதோர் நாதவிந்து வெகுவிசித
விற்பனையறியவொரு கற்பனை சொல்வேன்
பாவிகளிதை யறியார் கல்லுகள்தனில்
பாவனை யொப்பாகவுமே தாவிதஞ்செய்வார்
ஆவியென்று மறியாமல் செலவழிய
ஆத்துமலிங்கமதனைப் பார்த்துணராமல்.

ஆவிடையார் கோவிலிலே அமத்த குறி ஆத்தும இலிங்கம்.

"ஆ" ஆத்துமா; அதற்கு ஆதரவான விந்து சக்தி.
"சக்தி இல்லையேல் சிவம்(சீவன்) இல்லை; பிணம்.
"விடை" = இடபம், எதிர்மொழி, எருது, குதிரை, கோழிப்பேடு, வருத்தம், வலிமை, விடுதல்.

ஆவிடை = இலிங்கம்; தன்னுள் இருக்கும் வலிமை(விந்து)யை வெளித்தள்ளல்; வெளிவிடுதல்.

ஆவிடையார் கோயிலிலே யமைத்தகுறி = ஆண்குறி

தன் இலிங்கத்தில் விளையும் நாதவிந்துதனை மாதர்களிடத்தில் சேர்ந்து, புணர்ந்து வீண்விரயம் செய்து சக்தி இழந்து, வலிவு குன்றி, முதுமையடைந்து ஏமன் கைப்படுவார்கள். உண்மை அறியாத பாவிகள் ஆலயங்களில் கற்களில் இலிங்கம் செய்து அவைகளை நிறுவி பூசைகள்(பாவனைகள்) செய்வார்கள். இவர்கள் ஆத்துமலிங்கம் இப்படிப்பட்டதென்று விசாரித்து அறிந்து கொள்ளாமல் அதைத் தன் தேவைக்கதிகமாக வீணாகச் செலவழிக்கின்றனர். அவரவர்கள் கோசபீசங்களினிடத்துண்டாகும் இந்திரியங்களைத் தேவைக்கதிகமாகச் செலவிடாதிருப்பதே ஆன்மலிங்க வழிபாடு.

0 Comments: