விவேக சிந்தாமணி
*********************
64.அறிவுளோர் தமக்குநாளு மரசருந் தொழுதுவாழ்வார்
நிறையொடு புவியிலுள்ளோர் நேசமாய் வணக்கஞ்செய்வார்
அறிவுளோர் தமக்கீயாதோ ரசடது வருமேயாகில்
வெறியரென் றிகழாரென்றும் மேதினி யுள்ளோர்தாமே.
அறிவுடையவர்களுக்கு நாள்தோறும் பிறரை வணங்காத அரசனும் வணக்கம் கூறி கீழ்ப்படுவர். இவ்வுலகில் உள்ள மற்றவரும் உறுதிமாறா அன்புடனே வணங்கிப் பணிவர். அத்தகைய அறிவுடையோருக்கு குற்றம் வந்துசேர்ந்து இன்னல் படுவாராகில் உலகிலுள்ள மேலோர், அவரைப் பித்தர் என்றும் வெறியர் என்றும் என்றைக்கும் இகழமாட்டார்கள். மதியிலாச் செல்வந்தர் மட்டிலுமே அடக்கமுடையாரை அறிவிலி என்று இகழ்வார்கள்.
Monday, December 31, 2007
64.அறிவுளோர் தமக்குநாளு மரசருந் தொழுது
Posted by ஞானவெட்டியான் at 9:32 AM
Labels: விவேக சிந்தாமணி
Subscribe to:
Post Comments (Atom)
2 Comments:
மதியிலார் மட்டுமே அறிவுளாரை ஏசுவர் என்பது எவ்வளவு உண்மை?
அன்பு குமரா,
வருகைக்கு நன்றி.
இன்றும் என்றும் அசைக்கமுடியாத உண்மை.
Post a Comment