Monday, December 31, 2007

63.தேளது தீயில்வீழ்ந்தால் செத்திடா

விவேக சிந்தாமணி
**********************
63.தேளது தீயில்வீழ்ந்தால் செத்திடா தெடுத்தபேரை
மீளவே கொடுக்கினால் மெய்யுறக் கொட்டலேபோல்

ஏளனம் பேசித்தீங்குற் றிருப்பதை யெதிர்கண்டாலும்

கோளினர் தமக்குநன்மை செய்வது குற்றமாமே.


தேளானது தீயில் வீழ்ந்துவிடுகிறது; அது இறந்துவிட்டதா இல்லையா எனப் பார்க்க எடுத்தவரை திருப்பிக் கொடுக்கினால் உடலில் பதியக் கொட்டும். அதுபோல, அங்கதம்(ஏளனம்) பேசி அதனால் துன்பமடைந்தவரைக் கண்முன்னே கண்டாலும் திருந்தாது கோள்சொல்லி அலைபவருக்கு நாம் நன்மை செய்தால் அதனால் துன்பமே வரும்.

2 Comments:

Anonymous said...

உண்மைதான்!

விவேக சிந்தாமணி முழுவதுமே அனுபவித்தவரால் எழுதப்பெற்றவை
நீங்கள் தொடர்ந்து அவைகளை வலையேறுவத்ற்குப் பாராட்டுக்கள்
நிறையப் பேர்களுக்கு அது பயன்படும்!

Anonymous said...

அன்பின் சுப்பையா,
மிக்க நன்றி