விவேக சிந்தாமணி
*********************
65.குருவுப தேசமாதர் கூடிய வின்பந்தன்பால்
மருவிய நியாயங்கல்வி வயதுதான் செய்ததர்மம்
அரியமந் திரம்விசார மாண்மையிங் கிவைகளெல்லாம்
ஒருவருந் தெரியவொண்ணா துரைத்திடி லழிந்து போமே.
தனக்கு மட்டிலும் ஞானாசிரியன் உபதேசித்த உபதேசம், மடந்தையருடன் புணர்ந்தபோது கிட்டிய இன்பம், மனதில் பொருந்திய நியாயம், தான் பெற்ற உயர்ந்த கல்வி, ஆயுள், மிகுதியாய்ச் செய்த தருமம், தன்னிடம் இருக்கும் அரிய மந்திரம், துன்பம், வல்லமை ஆகியனவற்றை வெளியிடல் ஆகாது; வெளியிடின் அழிந்து போகும்.
குரு உபதேசித்த மந்திரத்தை வெளியிட்டால் அதற்கு மதிப்பில்லாமல் போகும். மடந்தையருடன் புணர்ந்தபோது கிட்டிய இன்பத்தை வெளியிட, அதனால் தூற்றுதலும் பகையுமுண்டாகும். ஒருவர் தம் நியாயமான தீர்ப்பை முதலிலேயே கூறிவிட்டால், தனக்கு வேண்டியவர்கள் அதை மாற்றுமாறு கட்டாயப்படுத்த, அதனால் நிலை தடுமாறும் நிலை வரும். தன் கல்வித் தகுதியை மூடரிடம் கூற, அதை ஏற்றுக்கொள்ளாது கூறியவரையும் பழிப்பார்கள். மிகுதியாய்ச் செய்த தருமத்தை வெளியிட, அதைத் தற்புகழ்ச்சி என மற்றவர் பழிப்பார்கள். துன்பத்தை வெளியிட, மற்றவர் இகழ்வார்கள். வல்லமையை வெளியிட,"ஆண்மையில்லாமையால் வாய் வீரம் பேசுகிறார்" என்னும் ஏச்சுக்காளாக நேரிடும்.
Monday, December 31, 2007
65.குருவுப தேசமாதர் கூடிய
Posted by ஞானவெட்டியான் at 9:34 AM
Labels: விவேக சிந்தாமணி
Subscribe to:
Post Comments (Atom)
2 Comments:
இவ்வளவு அனுபவ வார்த்தைகள் இருந்தும் தெரியாததால் எத்தனை பிழைகள் செய்கிறோம் நாம்.
அன்பு குமரா,
ஆமாம். மறைக்கவேண்டியவற்றை மறைக்காவிடில் துன்பமே!
வருகைக்கு நன்றி
Post a Comment