Saturday, December 29, 2007

61.சிறுகுடலுந் தொந்திவயி றான

ஞானம் எட்டி
**************
61.சிறுகுடலுந் தொந்திவயி றான வாறுஞ்
சிறந்தபொறி யதிற்கலந்து நின்ற வாறும்
பெருங்குடலு மொருபுறமாய்ப் பிரிந்த வாறும்
பேர்பெரிய வீரல்குலை சமைந்த வாறும்
மறுமடலா யீரல்நுரை யிரண்டுங் கூடி
வளர்ந்ததுவுஞ் சாதகமாய் மகிழ்ந்த வாறும்
உருவுடனே செவிநாசி யுதடு நாக்கு

வுவகையுட னெடுத்தவகை யுரைப்பே னாண்டே.


சிறுகுடலும், பெருவயிறும், அதில் ஐம்பொறிகள் கலந்து நின்றமையும் பெருங்குடல்கள் ஒருபுறத்தில் பிரிந்திருந்தமையும், பெரிய ஈரல்குலை உண்டானமையும், அந்த ஈரலில் மண்ணீரல், நுரையீரலென்று இரண்டாகி வளர்ந்தமையும், உருவோடு செவி, மூக்கு உதடு, நாக்கு ஆகியவைகள் புன்முருவலோடு உதித்த விதத்தையும் நான் இனிச் சொல்லுகின்றேன் ஆண்டே.

0 Comments: