Saturday, December 29, 2007

60.நாடிநரம் பதுவுதிரம்

ஞானம் எட்டி
**************
60.நாடிநரம் பதுவுதிரம் நயந்த வாறும்
நலமான தசவாய்வு செனித்த வாறும்
நீடியதோ ரெலும்புகளு நிகழ்ந்த வாறும்
நிலையான கருவியெல்லாந் தனித்த வாறும்
கூடியதோர் குய்யம்வந் துதித்த வாறுங்
குறிப்பறிய பஞ்சகர்த்தாள் குடில வாறுஞ்
சூடியதோர் மார்புகண்கள் வந்த வாறுஞ்
செல்லுகிறேன் விபரமினி யாண்டே கேளே.

நாடிகள் பத்தும், வாயுக்கள் பத்தும் உண்டான வகையையும், இரத்தம் சுரக்கும் முறையும், நீண்ட எலும்புகள் உண்டாகும் முறையும், நிலையாக நின்றியங்கும் உட்கருவிகளெல்லால் உண்டான வகையும், குய்யமும், விந்துவும் உண்டாகும் முறையும், பஞ்சகர்த்தாள் எனும் ஐம்பூதங்களின் குடியிருப்பும், மார்பு, கண்கள் ஆகியவைகளெல்லாம் உண்டாகும் விவரங்களை இனிமேற் சொல்லுகின்றேன்; என் ஆண்டே! கேளே!

0 Comments: