ஞானம் எட்டி
**************
59.கால் கரமும் பாதமுதலான வாறுங்
கணுவிரலு நகஞ்சதையுந் தரித்த வாறும்
விலாக்கொடிதா னெலும்புநிணம் வகுத்த வாறு
மிரதமொடு மார்புகழுத் தான வாறுந்
தோலான துடைவயிறு தொக்கின் வாறுந்
தொகுத்தநரம் பதுவுஞ்சடஞ் சூட்டும் வாறும்
மாலான மாதர்கருக் குழியிற் சேர்ந்த
வயணமிதை யின்னதென்று வகுப்பே னாண்டே.
கால்கள், கைகள், கணு, விரல்கள், நகம், சதை, விலாக்கொடி, எலும்பு, நிணம், இரத்தம், மார்பு, கழுத்து, தோள், துடை, வயிறு, தொக்கு, நரம்பு, ஆகிய இந்த அங்கங்களெல்லாம் தாயின் கருப்பையில் சேர்ந்து உடலாகிய வரலராற்றையும் நான், இன்ன, இன்னதென்று வகுத்துச் சொல்லுவேன், ஆண்டே.
Saturday, December 29, 2007
59.கால் கரமும் பாதமுதலான
Posted by ஞானவெட்டியான் at 5:36 PM
Labels: ஞானம் எட்டி
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment