ஞானம் எட்டி
**************
58.ஆதியிலே கருவூரு நாட்டுக் குள்ளே
அம்பரமாஞ் சிற்பரத்துப் பெரும்பா ழுள்ளே
வீதியிலே சிறந்தசிவ நாத விந்து
வெளிகடந்து வாயிரத்தெட் டிதழிற் பொங்கி
சோதியிலுஞ் சுழிமுனையாய் தோய்ந்த பின்பு
சுக்கிலமுஞ் சுரோணிதத்தா லெடுத்த பாண்டஞ்
சாதியிலு மெனைப்பறைய னென்றே சொல்லுஞ்
சண்டாளர்க் கிந்நூலைச் சாற்று வேனே.
அம்பரம் = பரவெளி, ஆகாயம்
சிற்பரம் = கடவுள், பெருமம்(பிரமன்)
பாழ் = சூனியம்
வீதி = நேராய் ஓடும்
சாதியிலே என்னைப் பறையனென்று சொல்லும் சண்டாளர்கட்க்கே, இந்த நூலைச் சொல்லுகின்றேன். பரவெளியாம் சிற்பரம் என்னும் சூனியத்தில் உள்வீதியில் நேராகப் பாயும் சிறந்த சிவநாதவிந்து ஆயிரத்தெட்டிதழ்க் கமலத்திற் பொங்கி அவ்விடத்தில் சுழிமுனையிற் படிந்தபின்பு கருவூரென்னும் அன்னையின் கருப்பையில் சுக்கிலசுரோணிதக் கூட்டுறவால் எடுத்தது இந்த உடம்பாகும்.
Saturday, December 29, 2007
58.ஆதியிலே கருவூரு
Posted by ஞானவெட்டியான் at 5:34 PM
Labels: ஞானம் எட்டி
Subscribe to:
Post Comments (Atom)
2 Comments:
நல்ல விளக்கம் ஐயா.
அன்பு குமரா,
மிக்க நன்றி
Post a Comment