Saturday, December 29, 2007

57.மடைதிறந்து நாதவிந்து

ஞானம் எட்டி
**************
57.மடைதிறந்து நாதவிந்து வந்த வாறு
மாறியிரு கலைபிரிந்து வளர்ந்த வாறும்
திடமுடனே பதின்மூன்றாங் கோட்டின் மேலுஞ்
செங்கநதி போலவும்வந் துதித்த வாறும்
உடலெடுத்து ஆவியதி லுதித்த வாறு
மூமையென்ற வெழுத்ததனி லுயர்ந்த வாறும்
இடைநடுவே யெனைப்பறைய னென்ற வாறு
மென்னுடைலே யெடுத்தவகை யினஞ்சொல் வேனே.


பெருகிவருகின்ற நாதவிந்துக்கள் உண்டானவிதத்தையும், இரண்டு கலைகளும் மாறிமாறிவரும் விதத்தையும், மேலாறு கீழாறாகிய ஆகிய ஆதாரத் தானங்கள் பன்னிரண்டையும் கடந்த பதின்மூன்றாவது இடத்தின் மேல் ஒரு அமுதச் சுரப்பு வந்த விதத்தையும், இந்த உடலில் உயிர் வந்து சேர்ந்த விதத்தையும், ஊமையென்னும் மெளன அக்கரத்தால் நமக்குள் உயிர் வந்து சேர்ந்த விதத்தையும், இவைகளுக்கு மத்தியில் என்னைப் பறையனென்று சொல்லியழைக்கும் உங்களுக்கு என் உடல் எடுத்த விதத்தை நான் சொல்லுகின்றேன்.

2 Comments:

Anonymous said...

ஐயா!
மனித உடலின் சிருஸ்டியின் சூக்குமம் வியப்புக்குரியதே!!! இதை எழுதியவர் யார்??,ஏன் இப் பறையர் எனும் சொல் வந்தது???
யோகன் பாரிஸ்

Anonymous said...

அன்பு யோகன்,
தங்களின் வினாவுக்கு விடை:
http://njaanametti.blogspot.com/2006/02/blog-post.html

என் வேண்டுகோள் காண:
http://njaanametti.blogspot.com/2006/02/blog-post_09.html

திருவள்ளுவரை இழிகுலத்தோன் எனக்கூறி அவருடைய நூல்களை அரங்கேற்றம் செய்ய மறுத்த உயர்சாதியினருக்கு "யார் உயர்ந்தவர்?" எனும் பாகுபாட்டை இந்நூலின் வாயிலாக உணர்த்தியதாக செவிவழிக் கதை.