Monday, December 31, 2007

59.முடவனை மூர்க்கன் கொன்றால் மூர்க்கனை

விவேக சிந்தாமணி
*********************
59.முடவனை மூர்க்கன் கொன்றால் மூர்க்கனை முனிதான் கொல்லும்
மடவனை வலியான் கொன்றால் மறலிதா னவனைக் கொல்லும்

தடவரை முலைமாதேயித் தரணியிலுள்ளோர்க் கெல்லாம்
மடவனை யடித்தகோலும் வலியனை யடிக்கும் கண்டாய்.

மலைபோன்ற பெருத்த தனங்களையுடைய பெண்ணே! அகங்காரங்கொண்ட மூர்க்கன் ஒருவன் கைகால் முடங்கிய(இயலாமையுடன் உள்ள) முடவனைக் கொன்றால், அவனை அவனைவிட வலிய மூர்க்கன் கொல்லுவான்; அல்லது அவனுடை சினமே(முனி) அவனைக் கொல்லும். புத்தியில்லாத ஏழையை(மடவனை) வலியவன் கொன்றால் அவனை மறலியாம் ஏமன் கொல்லுவான். செல்வச் செருக்காலே (செல்வம்)இல்லாதவனை அடித்த கோலே அச்செல்வனை அடிக்கும்.

5 Comments:

Anonymous said...

ஆமாம் உண்மைதான் நான் அடிக்கடி சொல்லும் தத்துவமே இது தான் இதை உணராத சிலர் இளமையின் வேகத்தில் செல்வத்திமிரில் என்னனென்மோ செய்து பிறகுதான் உணர்கிறார்கள் இதை படித்து முன்னமே ஏன் தெரிந்து கொள்ள மாட்டேங்கிறார்கள்.

Anonymous said...

அருமையான கருத்து. அழகான பாடல். சொல்ல மெட்டாக இருக்கிறது. மேலும் எழுதுங்கள்...

Anonymous said...

அன்பு என்னார்,
பட்டபின்புதான் ஞானி.

Anonymous said...

பட்டினிக்குத் தீனி கெட்டபின் ஞானி

Anonymous said...

அன்பு என்னார்,
//பட்டினிக்குத் தீனி கெட்டபின் ஞானி//
இது கண்ணதாசனின் பாடல் அல்லவா?

நான் சொல்ல வந்தது பட்டபின்பு தான் கட்டம் உணர்ந்து ஞானியாகிறான்.