விவேக சிந்தாமணி
**********************
57.சந்திரனில்லா வானந் தாமரையில்லாப் பொய்கை
மந்திரியில்ல வேந்தன் மதகரி யில்லாச்சேனை
சுந்தரப் புலவரில்லாத் தொல்சபை சுதரில்வாழ்வு
தந்திக ளில்லாவீணை தனமிலா மங்கைபோலாம்.
சந்திரன் இல்லா ஆகாயம், தாமரை இல்லாத தடாகம், மந்திரியில்லா அரசன், மதயானை இல்லாத சேனை, அழகுதமிழ்ப் புலவர் அற்ற சவை, நன்மக்களற்ற வாழ்க்கை, தந்தி நரம்பு இல்லாத வீணை, இவை யாவும் இருதனங்களற்ற மங்கையிடம் பெறும் சுகம் போல் வீணாகும்.
Monday, December 31, 2007
57.சந்திரனில்லா வானந் தாமரையில்லா
Posted by ஞானவெட்டியான் at 8:14 AM
Labels: விவேக சிந்தாமணி
Subscribe to:
Post Comments (Atom)
3 Comments:
இதில் ஒரு பாடல் வருமே மனிதனுக்கு கஷ்ட காலம் என பசு மாடு கண்று போட்டது விதை போட நாற்றங்காளுக்குச் சென்றது சுவர்இடிந்து விழுந்தது மனைவிக்கு இடுப்பு வழியெடுத்தது என
அன்பு என்னார்,
//இதில் ஒரு பாடல் வருமே மனிதனுக்கு கஷ்ட காலம் என பசு மாடு கண்று போட்டது விதை போட நாற்றங்காளுக்குச் சென்றது சுவர்இடிந்து விழுந்தது மனைவிக்கு இடுப்பு வழியெடுத்தது என//
"இதில் ஒரு பாடல் வருமே மனிதனுக்கு கஷ்ட காலம் என பசு மாடு கன்று போட்டது விதை போட நாற்றங்காலுக்குச் சென்றது சுவர்இடிந்து விழுந்தது மனைவிக்கு இடுப்பு வலியெடுத்தது என" இருத்தல் வேண்டும்.
இதுபோன்ற பாடல் விவேக சிந்தாமணியி படித்ததாக ஞாவகம் இல்லை. முடிந்தால் பாடலைத் தாருங்களேன்.
ஐயா நல்ல விளக்கம்!;மேலும் என்னாருக்கு; நீங்கள் குறிப்பிட்டபாடலை, நான் ,கண்ணதாசன் மேற்க்கோள்
காட்டி,"அர்த்தமுள்ள இந்து மதத்தில்" - துன்பங்களில் இருந்து விடுதலை என்ற பாகத்தில் படித்துள்ளேன். அப்பாடல் "ஆவீன மழை பொழிய.....எனத் தொடரும். தேடிக்கிடைத்தால் அனுப்புகிறேன்.
நன்றி
யோகன்
பாரிஸ்
Post a Comment