Saturday, December 29, 2007

51.அண்டபிண்டபுவனத்துக்கும்

ஞானம் எட்டி
**************
51.அண்டபிண்டபுவனத்துக்கும் சந்திரனொளி
.........ஆதித்தவருருவு மானதெங்கே
சண்டப்பிரசண்டமதாய் மந்திரமோதுஞ் சவுங்கலே
...........தானறியாய்ச் சாற்றிடுவீர்காண்
உண்டதோருணவறியார் உவரசத்தினுப்பு
.............வினுவரகற்றி யுண்டுமறியார்
கண்டபொருள் விண்டதறியார் கல்லுப்புவந்த
..............காரணத்தைக் கண்டறியாக் கர்மிகளே கேள்.

ஆடம்பரமாய் ஏகப்பட்ட சத்தங்கள் செய்து மகாசிறப்புடனே மந்திர உச்சடானஞ் செய்கின்ற அறிவு மழுங்கியோரே!
உண்டவுணவை யுணராமலும், உவர்ப்பூமியிலுண்டான உப்பையெடுத்து அதனிடமுள்ள உவர்ப்புச் சுவையை நீக்கி அதை உண்ண அறியாமலும், கண்ணால் கண்ட பொருட்களைச் சொல்ல அறியாமலும் கல்லுப்பு வந்த காரணத்தை அறியாமலுமிருக்கின்ற கர்மிகளே! நீங்கள் அண்ட பிண்ட சராசரங்கள் ஆகியவைக்கும் ஆதாரமாய் உள்ள சந்திர சூரியர்கள் இப்பிண்டத்தில் வந்து உதித்த இடம் எதுவோ அதைச் சொல்லுங்கள்.

0 Comments: