Saturday, December 29, 2007

52.நாதவிந்துதானறிய

ஞானம் எட்டி
**************
52.நாதவிந்துதானறிய சிவசிவ நடுவணைச்
...............சுடரதுவுந்தாண்டி யப்பால்
போதரவாயுடலெடுத்த தத்துவத்தின் புதுமையைச்
..............சொல்லுகிறே னாண்டையே கேளீர்
மாதர்கள் சையோனிதனிலும் விந்துதித்த மார்க்க
..............மிடவா லெடுத்தவாறறிந்திடீர்
ஏதெனவென்றேவிளங்க இப்புவிதனி லிந்திரிய
..............மாதவிடாயினமது காண்.

ஆண்டையே! கேளீர்! நாதத்தையும், விந்துவையும் அறியும்படி நடுவணையிலுள்ள (இரு கண்களின் நடுவில் உள்ள அக்கினி கலையின் இருப்பிடம்) அக்கினி மண்டலத்தைத் தாண்டிப்போய் கண்டதால், இந்த உடல் வந்த உண்மையைச் சொல்லுகின்றேன். அது என்னவென்றால், பெண்களின் இந்திரியமானது மாதவிடாயின்போது வெளியாகும். அதன்பின் பெண்ணின் முட்டை உருவாகும். அது முற்றிக் கருவான நாளில் ஆணும் பெண்ணும் புணர ஆணின் விந்து, பெண்ணின் கருவோடு கலந்து இவ்வுலகில் உடலும் உயிரும் வந்ததாகும்.

0 Comments: