Saturday, December 29, 2007

50.சாத்திரம்பிறந்ததெங்கே

ஞானம் எட்டி
**************
50.சாத்திரம்பிறந்ததெங்கே சிவசிவ சாதியினால்
..........வகைகளுமானதெங்கே
கோத்திரம்வகுத்ததெங்கே சிவசிவ குருவுடன்
.............சீடனும் வந்துதித்ததெங்கே
போற்றிடுஞ்சற்குருவுமெங்கே பொய்க்குருவினால்
............பூசையனுட்டான முறைப்பொருளுமெங்கே
சோற்றி லெய்துங்கல்லறியா சுணங்கர்களே சொர்ண
............மலரென்னமய மன்னமலர் காண்.

சோற்றிலிருக்கும் கல்லையெடுக்கவழியாயாத நாய்களே!
சாத்திரம் தோன்றிய இடம் எது?
சாதிவகைகள் கோத்திரங்கள் முதலியவைகளை வகுத்த இடம் எது?
உண்மைக் குருவென்றும் சீடனென்றும் வந்துபிறந்த இடம் எது?
அந்தப் பொய்க் குருவருளாற் கிடைக்ககப்பெற்ற பூசை அநுட்டான முதலியவைகளைச் செய்த இடமும், அவைகளால் கிட்டிய பலனும் எது? இவைகளெல்லாம் தங்கத் தாமரையில் வீற்றுள்ள எம்பெருமாட்டியினுடைய திருவடிகளிலேபிறப்பனவாகும், கண்டீரா?

0 Comments: