Saturday, December 29, 2007

49.அண்டபிண்டம்பிறந்ததெங்கே

ஞானம் எட்டி
***************
49.அண்டபிண்டம்பிறந்ததெங்கே சிவசிவ அந்தணர்
............முனிவர் வந்ததுதித்ததெங்கே
பிண்டம்பலவுயிரும் பிறந்தவகை பிரபந்தமிதை
.............யறிந்து பேசுவீர்காண்
மண்டலஞ்சூழுங் கதிர்மதியும் வன்னியும் பிறந்த
.............தெங்கே வானுமெங்கே
விண்டபொரு ளண்டருங்காணார் வேதியர்களே விசுவ
.............ரூபமறிந்து விளங்குவீரே.

வேதியர்களே! அண்டமும்,பிண்டமும் பிறந்த இடம் எங்கே? அந்தணர்கள், முனிவர்கள் பிறந்த இடமும் எங்கே? பிண்டமாகிய இவ்வுடலும், பல உயிர்களும் பிறந்த விதம் என்ன? இந்தக் கதையை முதலில் அறிந்துகொண்டு அப்புறம் பேசுங்கள். அண்டத்தில் சூழ்ந்திருக்கின்ற சூரிய சந்திரன், அக்கினி ஆகியவை உண்டான இடத்தையும், அதேபோல பிண்டத்தில் சூரிய சந்திரன், அக்கினி ஆகியவை உண்டான இடத்தையும், ஆகாயம் பிறந்த இடத்தையும் அறிவீர்களா? நான் கூறியவற்றின் உட்பொருளை வானவரும் (ஆன்மாவை மேய்க்கும் இடயனும்) காணார். அப்படியிருக்க நீங்கள் விசுவ ரூபம் எனப்படும் ஆன்மாவின்(விசுவநாதனின்) உருவறிந்தபின் எனக்குச் சொல்லுங்கள் பார்ப்போம்.

0 Comments: