Saturday, December 29, 2007

48.தீர்த்தமுமாடிக்கொள்வீர்

ஞானம் எட்டி
***************
48.தீர்த்தமுமாடிக்கொள்வீர் தெளிந்தவர்போல்
...........செபதபசாத்திரங்களோதிக் கொள்வீர்
யாத்திரைதீர்த்தங்களாடி நதிகள் தோறும் அலைந்து
............அலைந்துசுற்றி அலையுகிறீர்
மாற்றியேபிறப்பமென்று பொய்ப்பிரட்டு வாய் சமத்து
............சாத்திரஞ் சொல்மடையர்களே
பாத்திராபாத்திரமறியா பாவிகள் தான் பாடுபட்டுங்
............கூறறியாமாடுகள் தான்.

மாற்றிமாற்றிப் பிறப்போமென்று பொய்பேசுகின்ற மடையர்களே! நீங்கள் எல்லாவற்றையும் அறிந்தவர்கள் போன்று, தீர்த்தமாடிச் செபதபங்கள் செய்கிறீர்கள். யாத்திரை செய்கிறீர்கள். நதிகள்தோறும் சுற்றிச் சுற்றி அலைந்து திரிகிறீர்கள். ஆகையால் நீங்கள் பார்க்கமுடியாத பாத்திரமாய திருவடிகளை அறியாதபாவிகளும் கூரியபுத்தியில்லாத மாடுகளுமாவீர்கள்.

0 Comments: