Saturday, December 29, 2007

47.கருவதுந்தரித்ததெங்கே

ஞானம் எட்டி
***************
47.கருவதுந்தரித்ததெங்கே சிவசிவ காயமா
.............யுதித்தவந்தக் கருத்துமெங்கே
அருவுருவான தெங்கே அண்டபிண்டங்களாதியு
............மந்தமுங்கூடியமைந்ததெங்கே
உருவடி நடுவுமெங்கே ஒங்காரமெனும் உடலுயி
..............ரெடுத்த விதவுகமையெங்கே
மருவியநால்வேதஞ் சொலும்மதி கெட்ட மாந்தர்களிதை
..............யறிந்து வகுத்துரைப்பீர்.


பொருந்திய நான்கு வேதங்களையும் மனப்பாடம் செய்து ஓதும் அறிவுகெட்ட மனிதர்களே!
கீழ்வரும் வினாக்களுக்கு உங்களால் விடை அளிக்க இயலுமா?

நீங்கள் கருவாய் எங்கு தரித்தீர்கள்? எந்த விதத்தில் தரித்தீர்கள்? அந்தக்கருவானது தாயின் தேகத்தில் வந்தவிதம் எப்படி? உருவற்ற அது உருவமானது எப்படி? அண்டபிண்டங்களெல்லாம், முதல், நடுகடை என்று சேர்ந்து உண்டான விதம் எப்படி? உருவான பொருட்களில் அடி, நடு, வந்த இடம் எங்கே? "ஓம்" எனும் வடிவாய் உள்ள இந்த உடல் நமக்கு வந்து சேர்ந்த விதம் எப்படி? சொல்லுங்கள்? பார்ப்போம்.

வேண்டுகோள்

1 Comment:

Anonymous said...

என்ன கேள்வி விஞ்னா யுகத்தில் என பலர் கேட்க கூடும் அது தான் தத்துவம்