Saturday, December 29, 2007

46.உதிரமுந்திரண்டதெங்கே

ஞானம் எட்டி
***************
46.உதிரமுந்திரண்டதெங்கே நாதமதி லோடியேதான்
.............விந்ததுவும் பாய்ந்ததெங்கே
மதியொளிரவியுமெங்கே அமிர்தரச வாருதியுமான
..............வரலாறுமெங்கே
உதிரமும்பிறந்ததெங்கே உலகுதனில்சாத்திரியாசாரிகளே
.............தானுரைப்பீர்காண்
அதிதவேதங்களோதும் சூரியசந்திரர் அனைவரிருந்தவர்க
.............ளாண்மையுரைப்பீர் .

உலகத்திலுள்ள சாத்திரிகளே! ஆசாரியர்களே!
உதிரம் பிறந்தது எங்கே? உதிரம் திரண்ட இடம் எங்கே? நாதத்தில் விந்து பாய்ந்தது எங்கே?

நீங்கள் சூரியன் சந்திரன் ஆகியோர் கிரகங்கள் என்றும் அந்தந்தக் கிரகங்களுடைய வல்லமைகளையும் எடுத்துச் சொல்லுவீர்கள் அல்லவா?

அமிர்தரசபெருக்கெடுத்துப் பாய்ந்தது எங்கே? எனும் தத்துவம் தெரிந்தால் எடுத்துச் சொல்லுங்கள். வேதங்களை மிக ஓதும் நீங்கள், சூரியன் யார்? சந்திரன் யார்? இவைகளுக்குப் பிண்டத்தில் என்னென்ன இடங்கள்? ஆகியவற்றையெல்லாம் சொல்லுங்கள் பார்ப்போம்.

0 Comments: