Saturday, December 29, 2007

45.வித்தையிலதிதமெந்தன்

ஞானம் எட்டி
**************
45.வித்தையிலதிதமெந்தன் விளங்குந்திரு
..........வேதாந்த சாரமுண்டு மேதினியில்வாழ்
எத்திசையெல்லாம் புகழும் இரவிமதி
.........யேகாட்சரத்தைக்கண்டு சாகாமல்நான்
பத்தியில்முத்திதரும் உலகமதில்
.........பரைநூலறிந்த சாம்புவன்காணும்
முத்தியுமெய்ஞ்ஞானநெறி முக்கண்ணுடைய
........மும்மூர்த்தியானவர்கள் தம்மூலத்தினால்.

உண்மை ஞானமார்க்கத்தால் தம்மை அறிந்தவர்களுக்கு வீடுபேற்றைக் கொடுக்கின்ற மூன்று கண்களையுடைய, மும்மூர்த்திகளுக்கும் தலைவனான, சிவபெருமானுடைய திருவருளினால் கல்வியில் மிக்க தேர்ச்சியை அடைந்திருக்கின்ற நான் வேதாந்த சாரத்தை உண்டு எல்லாத் திசைகளிலுமிருக்கும் உலகத்தவரால் புகழப்பட்டு வருகிறேன்; சூரிய, சந்திர கலைகளுக்கும் ஆதாரமாயிருக்கின்ற ஓரெழுத்தை இனம் கண்டு சாகாமலிருந்து மோக்கத்தை அடையும் வழி அறிந்தவன்.

வேண்டுகோள்

0 Comments: