ஞானம் எட்டி
**************
44.சத்தியுநான்காணும் சிவசிவ
............சாம்பவமூர்த்தியெனு நான்காணும்
புத்தியிலதிதவன்காண் சிவசிவ புவனமதில்
...........புகழ்திருவள்ளுவன் காண்
சித்தியிலதிதவன்காண் சிவசிவ
..........சிங்காதனத்தி லிருந்தெங்கெங்குமாய்
அத்திமுதலெறும்புகடை யாவர்களும் அற்புத
..........மெய்ஞ் ஞானவெட்டியாண்டே கேளீர்.
புத்தியிலும், சித்தியிலும், நான்உயர்ந்தவன் ஆகையாலும், சிவசிம்மாசனத்தில் இருந்துகொண்டு எங்குமுள்ள அத்திமுதல் எறும்பு ஈறாகவுள்ள உயிர்க்கெல்லாம் அற்புதத்தை தரத்தக்க ஞானவெட்டியானும், உலகத்தாரால் புகழப்படுகின்ற திருவள்ளுவன் எனும் பெயரையுடையவனும் ஆகையால், சத்தியும் நானே சாம்பவ மூர்த்தியும் நானேயாவேன்.
வேண்டுகோள்
Saturday, December 29, 2007
44.சத்தியுநான்காணும்
Posted by ஞானவெட்டியான் at 5:11 PM
Labels: ஞானம் எட்டி
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment