Saturday, December 29, 2007

43.வேதமுநான்காணும்

ஞானம் எட்டி
**************
43.வேதமுநான்காணும் சிவசிவ
............வேதாந்தசாரமு நான்காணும்
மாதவமுனிவர்க்கெல்லாம் உயர்கின்ற
...........வள்ளுவசாம்புவ னான்காணும்
பேதாபேதங்களறிய என்னூல்வகையில்
...........பிரட்டுவுருட்டுகளும் பிரித்துரைப்போம்
ஆதாரமூலமெல்லாம் அசடில்லாமல்
...........அவனிதனிலுரைப்போமாண்டே கேளீர்.

வேதமும் நானே! வேதசாரமும்நானே; மகத்தான தவத்தையுடைய முனிவருக்கு எல்லாம் உயர்ந்த திருவள்ளுவவெனன்னும் சாம்புவன்நானே. ஆகையால் நான்சொல்லிய இந்நூலில் பேதாபேதங்களை நன்றாய் அறியும்படி செவ்வையான விதயங்களைப் பிரட்டு உருட்டு இல்லாது பிரித்துச்சொல்லுவேன். இவ்வுலகத்தின்கண் ஆதாரமூலங்களின் தொகை, வகை, விரிவுகளையெல்லாம் குற்றமில்லாமல் நன்றாய் எடுத்துச் சொல்லுவேன். ஆகையால் என் ஆண்டையே! நீர்கேளும்.

வேண்டுகோள்

0 Comments: